

சென்னை: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2027-ம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 21 முதல் 25 வரை நாக்பூரில் நடைபெறுகிறது.
2-வது டெஸ்ட் போட்டி ஜனவரி 29 முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரை சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும், 3-வது டெஸ்ட் போட்டி குவாஹாட்டியில் பிப்ரவரி 11 முதல் 15 வரையிலும், 4-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் பிப்ரவரி 19 முதல் 23 வரையிலும், 5-வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 27 முதல் மார்ச் 3 வரை அகமதாபாத்திலும் நடைபெறுகின்றன.