பார்முக்கு திரும்பும் முனைப்பில் சூர்யகுமார் யாதவ்: இந்தியா - தென் ஆப்பிரிக்கா டி20-ல் இன்று மோதல்

பார்முக்கு திரும்பும் முனைப்பில் சூர்யகுமார் யாதவ்: இந்தியா - தென் ஆப்பிரிக்கா டி20-ல் இன்று மோதல்
Updated on
3 min read

கட்டாக்: இந்தி​யா - தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையி​லான 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 கிரிக்​கெட் தொடரின் முதல் போட்டி கட்​டாக்​கில் உள்ள பாராபதி மைதானத்​தில் இன்று இரவு 7 மணிக்கு நடை​பெறுகிறது.

இந்த இரு தரப்பு டி 20 கிரிக்​கெட் தொடரை அடுத்த ஆண்டு பிப்ரவரி​யில் நடை​பெற உள்ள டி 20 உலகக் கோப்பை தொடருக்கான முன்​னோட்​ட​மாக இந்​திய அணி கருதக்​கூடும். ஏனெனில் உலகக் கோப்பை தொடருக்கு முன்​ன​தாக இந்​திய அணி 10 டி 20 ஆட்டங்களில் மட்​டுமே விளை​யாட உள்​ளது. இதில் தற்​போது நடை​பெற உள்ள தென் ஆப்​பிரிக்க அணிக்கு எதி​ரான தொடரும் அடங்​கும். இந்​தத் தொடரை அடுத்து நியூஸிலாந்து அணிக்கு எதி​ராக 5 ஆட்டங்​கள் கொண்ட டி 20 தொடரிலும் இந்திய அணி விளை​யாட உள்ளது.

இதனால் தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ரான டி 20 தொட​ரானது உலகக் கோப்பை தொடரில் விளை​யாடும் சிறந்த அணிச் சேர்க்​கையை தேர்வு செய்​வதற்​கான களமாக இந்​தி​யா​வுக்கு அமையக்கூடும். கடந்த ஆண்டு டி 20 உலகக் கோப்பை வென்ற இந்​திய அணி அதன் பின்​னர் 26 ஆட்​டங்​களில் வெற்​றிகளை குவித்​துள்​ளது. 4 ஆட்​டங்​களில் மட்​டுமே தோல்வி அடைந்​துள்​ளது.

இருப்​பினும் இந்​திய அணி ஒரு டி 20 தொடரை கூட இழக்​க​வில்​லை. இதனால் டி 20 உலகக் கோப்​பைக்கு தயா​ராகும் வகை​யில் சிறிய மாற்​றங்​கள் மட்​டுமே செய்​யப்​படக்​கூடும் என கருதப்படுகிறது. இதனால் தென் ஆப்​பிரிக்க அணிக்கு எதி​ராக இந்​திய அணி​யின் வீரர்​கள் தங்​கள் திறமை​யைக் கூர்மைப்படுத்திக் கொள்​ளக்​கூடும். கழுத்து பகு​தி​யில் ஏற்​பட்ட காயத்​தில் இருந்து குணமடைந்​துள்ள ஷுப்​மன் கில் டி20 தொடரில் களமிறங்க உள்​ளார்.

கடந்த ஐபிஎல் தொடரில் இருந்து தொடர்ச்​சி​யாக விளை​யாடி வந்த ஷுப்​மன் கில், கடந்த மாதம் தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்​டி​யில் காயம் அடைந்​த​தால் சுமார் 3 வார காலம் கிரிக்​கெட்​டில் இருந்து விலகி இருந்​தார். தற்​போது முழு உடற்​தகு​தியை எட்டி உள்​ள​தால் மீண்​டும் விளை​யாட ஆயத்த​மாகி உள்​ளார். எனினும் அவரது பணிச்​சுமையை அணி நிர்​வாகம் கண்​காணிக்​கக்​கூடும்.

இது ஒரு​புறம் இருக்க அபிஷேக் சர்​மா, ஷுப்​மன் கில் கூட்​டணி இணைவது ரசிகர்​கள் மத்​தி​யில் மிகுந்த எதிர்​பார்ப்பை ஏற்படுத்தி உள்​ளது. இந்த கூட்​டணி கடந்த சில ஆட்​டங்​களில் தாக்கத்தை ஏற்​படுத்​தக்​கூடிய அளவி​லான செயல் திறனை வெளிப்​படுத்தி உள்​ளது. அபிஷேக் சர்​மா, கடைசி​யாக ஆஸ்திரேலிய சுற்​றுப் ​பயணத்​தில் 163 ரன்​கள் விளாசி​யிருந்​தார்.

சமீபத்​தில் சையது முஸ்​டாக் அலி டி 20 தொடரில் பெங்​கால் அணிக்கு எதி​ராக 52 பந்​துகளில், 148 ரன்​களை விளாசி மிரட்​டி​யிருந்​தார். அவரது ஸ்டிரைக் ரேட் 249 ஆக இருந்​தது. இதனால் அவரது மட்​டை வீச்சு ரசிகர்​களுக்கு விருந்​தளிக்​கக்​கூடும். ஆசிய கோப்பை தொடரின் போது தொடை பகு​தி​யில் காயம் ஆல் ​ரவுண்ட​ரான ஹர்​திக் பாண்​டியா 2 மாதங்​களுக்​குப் பிறகு மீண்டும் அணிக்கு திரும்பி உள்​ளார். சமீபத்​தில் அவர், சையது முஸ்​டாக் அலி தொடரில் 42 பந்​துகளில் 77 ரன்​கள் விளாசியிருந்தார். அவரது வருகை பந்​து​ வீச்​சிலும் பலம் சேர்க்கக்கூடும்.

அதேவேளை​யில் கேப்​டன் சூர்​யகு​மார் யாத​வும் பார்​முக்கு திரும்புவ​தில் கவனம் செலுத்​தக்​கூடும். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்​திய டி 20 அணி​யின் கேப்​டன் சூர்​யகு​மார் யாதவ் நியமிக்​கப்​பட்டு இருந்​தார். அதன் பின்​னர் அவர், விளை​யாடிய 15 டி20 ஆட்​டங்​களில் 184 ரன்​கள் மட்​டுமே சேர்த்​துள்​ளார். சராசரி 15.33 ஆக உள்​ளது. ஒட்​டுமொத்​த​மாக சூர்​யகு​மார் யாதவ் கடந்த 20 ஆட்​டங்​களில் ஒரு​முறை கூட அரை சதத்தை எட்​ட​வில்​லை. அவரது ஸ்டிரைக் ரேட் 187-ல் இருந்து 127.77 ஆக குறைந்​துள்​ளது.

சையது முஸ்​டாக் அலி தொடரில் கூட சூர்​யகு​மார் யாத​விடம் பெரிய அளவி​லான பேட்​டிங் செயல் திறன் வெளிப்​பட​வில்​லை. அவர், 5 ஆட்​டங்​களில் 165 ரன்​களே சேர்த்​தார். டி 20 உலகக் கோப்பைக்கு முன்​ன​தாக இழந்த பார்மை மீட்​டெடுப்​ப​தில் கவனம் செலுத்த வேண்​டிய கட்​டா​யத்​தில் சூர்​யகு​மார் யாதவ் உள்​ளார்.

இன்​றைய ஆட்​டத்​தில் விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னாக சஞ்சு சாம்​சனே களமிறங்​கக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​ படு​கிறது. ஏனெனில் ஜிதேஷ் சர்​மாவை​விட சாம்​சன் சிறந்த பார்​மில் உள்​ளார். டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்​னர் இந்​திய அணி​யில் அதிக ரன்​கள் குவித்த வீரர்​களின் பட்​டியலில் சஞ்சு சாம்​சன் 3-வது இடத்தில் உள்​ளார்.

மேலும் கடந்த காலங்​களில் தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ராக தொடக்க வீர​ராக களமிறங்கி 2 சதங்​கள் அடித்​திருந்​தார். சமீபத்தில் சையது முஸ்​டாக் அலி தொடர் 2 அரை சதங்​களும், 2 முறை 40 ரன்​களுக்கு மேலும் சேர்த்​திருந்​தார்.

தென் ஆப்​பிரிக்க அணி எய்​டன் மார்க்​ரம் தலை​மை​யில் களமிறங்​கு​கிறது. வேகப்​பந்து வீச்​சாளர் அன்​ரிச் நோர்க்​கியோ ஒரு வருடத்​துக்கு பின்​னர் அணிக்கு திரும்பி உள்​ளது பலம் சேர்க்கக்​கூடும். பேட்​டிங்​கில் எய்​டன் மார்க்​ரம், டெவால்ட் பிரேவிஸ், ரீஸா ஹெண்ட்​ரிக்​ஸ், டிரிஸ்​டன் ஸ்டப்​ஸ், டேவிட் மில்லர், குயிண்​டன் டி காக், கார்​பின் போஷ், மார்கோ யான்​சன் பலம் சேர்க்​கக்​கூடும்.

அணி​கள் விவரம் - இந்​தியா: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன்கில், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங்.

தென் ஆப்பிரிக்கா: எய்டன் மார்க்ரம் (கேப்டன்), குயிண்டன் டி காக், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெவால்ட் பிரேவிஸ், கார்பின் போஷ், மார்கோ யான்சன், கேசவ் மகாராஜ், டோனோவன் ஃபெரேரியா, ஜார்ஜ் லின்டே, ஓட்னீல் பார்ட்மேன், அன்ரிச் நோர்க்கியா, லுங்கி நிகிடி.

பார்முக்கு திரும்பும் முனைப்பில் சூர்யகுமார் யாதவ்: இந்தியா - தென் ஆப்பிரிக்கா டி20-ல் இன்று மோதல்
“நம் எதிரிகளைக் குறைத்து மதிப்பிடக் கூடாது...” - திமுக மாவட்டச் செயலாளர்களிடம் ஸ்டாலின் அறிவுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in