இந்​தி​யா, நியூஸிலாந்து தொடர்: இன்று முதல் டிக்கெட் விற்பனை

இந்​தி​யா, நியூஸிலாந்து தொடர்: இன்று முதல் டிக்கெட் விற்பனை

கோப்புப் படம்

Updated on
1 min read

புதுடெல்லி: இந்​தி​யா, நியூஸிலாந்​து அணி​களுக்கு இடையி​லான டி20, ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டிகளுக்​கான டிக்​கெட் விற்​பனை இன்று முதல் தொடங்​க​வுள்​ளது.

நியூஸிலாந்து கிரிக்​கெட் அணி இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 3 ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டிகள் மற்​றும் 5 சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் போட்​டிகள் கொண்ட தொடரில் பங்​கேற்க உள்​ளது. இதில் முதலில் ஒரு​நாள் தொடரும் அதனைத் தொடர்ந்து சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் தொடரும் நடை​பெற உள்​ளது.

இந்​தி​யா, நியூஸிலாந்து அணி​களுக்கு இடையி​லான முதல் ஒரு​நாள் போட்டி வரும் ஜனவரி 11-ம் தேதி நடை​பெறும். ஜனவரி 14 மற்​றும் 18-ம் தேதி​களில் முறையே 2-வது மற்​றும் மூன்​றாவது ஒரு​நாள் போட்டி நடை​பெறவுள்​ளது.

இந்​நிலை​யில் 3 ஒரு​நாள் போட்​டிகளுக்​கான டிக்​கெட் விற்​பனை தொடங்​கும் தேதி நேற்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. அதன்​படி முதல் ஒரு​நாள் போட்​டிக்​கான ஆன்​லைன் டிக்​கெட் விற்​பனை டிசம்​பர் 31-ம் தேதி(இன்​று) காலை 11 மணி முதல் தொடங்​கும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. 2-வது மற்​றும்​ 3-வது ஒரு​நாள்​ போட்​டிக்​கான ஆன்​லைன்​ டிக்​கெட்​ விற்​பனை ஜனவரி 1-ம்​ தேதி காலை 11 மணி முதல்​ தொடங்​கும்​ என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​தி​யா, நியூஸிலாந்து தொடர்: இன்று முதல் டிக்கெட் விற்பனை
ஊடுருவலுக்கு துணை போகிறார்: மம்தா மீது அமித் ஷா புகார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in