வைபவ் சூர்​ய​வன்ஷியின் சாதனைகளுடன் யு-19 உலகக் கோப்பையில் இந்தியா சாம்பியன்!

வைபவ் சூர்​ய​வன்ஷியின் சாதனைகளுடன் யு-19 உலகக் கோப்பையில் இந்தியா சாம்பியன்!
Updated on
1 min read

ஹராரே: ஐசிசி யு-19 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் இறுதிப் போட்​டி​யில் இங்​கிலாந்து அணியை 100 ரன்​கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்​திய அணி சாம்​பியன் பட்​டம் வென்றது.

ஜிம்​பாப்​வே​யின் ஹராரே நகரில் நேற்று நடை​பெற்ற இறுதிப் போட்டி​யில் முதலில் பேட் செய்த இந்​திய அணி 50 ஓவர்​களில் 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 411 ரன்​கள் குவித்தது. 14 வயதான வைபவ் சூர்​ய​வன்ஷி 218.75 ஸ்டிரைக் ரேட்டுடன் 80 பந்​துகளில், 15 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகளுடன் 175 ரன்​கள் விளாசி அசத்​தி​னார்.

இதன் மூலம் யு-19 டி 20 உலகக் கோப்பை வரலாற்​றில் இறுதிப் போட்​டி​யில் அதிக ரன்​கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்​தார் சூர்​ய​வன்​ஷி. இதற்கு முன்​னர் கடந்த 2012-ம் ஆண்டு நடை​பெற்ற இறு​திப் போட்​டி​யில் ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ராக இந்தி​யா​வின் உன்முகுந்த்சந்த் 111* ரன்​கள் சேர்த்​ததே அதிகபட்சமாக இருந்​தது.

மேலும் யு-19 உலகக் கோப்பை வரலாற்​றில் ஓர் ஆட்​டத்​தில் அதிக ரன்​கள் விளாசிய இந்​திய வீரர் என்ற பெருமையையும் சூர்​ய​வன்ஷி பெற்​றார். இதற்கு முன்​னர் 2022-ம் ஆண்டு தொடரில் ராஜ் பாவா 162* ரன்​கள் விளாசியிருந்தார்.

மேலும் ஒரு சிறப்​பம்​ச​மாக யு-19 உலகக் கோப்​பை​யின் ஒரு பதிப்பில் அதிக சிக்​ஸர்​கள் விளாசிய தென் ஆப்​பிரிக்​கா​வின் டெவால்ட் பிரெ​விஸின் சாதனையை​யும் முறியடித்​தார் சூர்யவன்ஷி.

கடந்த 2022-ம் ஆண்டு தொடரில் பிரெ​விஸ் 22 சிக்​ஸர்​கள் அடித்​திருந்​தார். தற்​போதைய தொடரில் சூர்​ய​வன்ஷி 30 சிக்​ஸர்​களு​டன் பிரம்​மாண்​ட​மான சாதனையைப் படைத்துள்​ளார். இந்த சாதனை​களு​டன் யு-19 உலகக் கோப்பையில் அதி​விரை​வாக சதம் அடித்த 2-வது வீரர் என்ற சாதனையை​யும் நிகழ்த்​தி​னார் சூர்​ய​வன்​ஷி.

அவர், 55 பந்​துகளில் சதம் விளாசி​னார். இந்த வகை​யில் ஆஸ்திரேலி​யா​வின் வில் மலாஜ்சுக் 51 பந்​துகளில் சதம் விளாசியதே சாதனை​யாக உள்​ளது. 420 ரன்​கள் இலக்குடன் பேட் செய்த இங்​கிலாந்து அணி 40.2 ஓவர்​களில் 311 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. இதனால் இந்​திய அணி 100 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்று சாம்​பியன் பட்​டம் வென்​றது.

இங்​கிலாந்து அணி​யில் கடும் அச்​சுறுத்​தலாக திகழ்ந்த காலேப் பால்​க​னர் 67 பந்​துகளில், 7 சிக்​ஸர்​கள், 9 பவுண்டரிகளு​டன் 115 ரன்​கள் விளாசி கடைசி வீர​ராக ஆட்டமிழந்தார். இந்​திய அணி தரப்​பில் அம்ப்​ரிஷ் 3 விக்கெட்​களை விழ்த்​தி​னார்.

தீபேஷ் தேவேந்​திரன், கனிஷ்க் சவு​கான் ஆகியோர் தலா 2 விக்​கெட்​கள் கைப்​பற்​றினர். யு-19 உலகக் கோப்பை தொடரில் இந்​திய அணி சாம்​பியன் பட்​டம் வெல்​வது இது 6-வது முறை​யாகும். இதற்கு முன்​னர் 2000, 2008, 2012, 2018, 2022-ம்​ ஆண்​டு​களி​லும்​ இந்​தி​ய அணி வாகை சூடியிருந்தது.

வைபவ் சூர்​ய​வன்ஷியின் சாதனைகளுடன் யு-19 உலகக் கோப்பையில் இந்தியா சாம்பியன்!
மெகா டீலிங்... இழுபறியாகும் கூட்டணி! - பிரேமலதாவின் எதிர்பார்ப்பு தான் என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in