இந்தியா - மே.இ. தீவுகள் கடைசி டி20 போட்டி மழையால் தாமதம்

இந்தியா - மே.இ. தீவுகள் கடைசி டி20 போட்டி மழையால் தாமதம்
Updated on: 
1 min read

பெங்களூரு: இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 5 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடர் நடைபெற்று வந்தது. இரு அணிகளும் தலா 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில் கடைசி போட்டி நேற்று பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.

மழை மற்றும் மைதான ஈரப்பதம் காரணமாக திட்ட மிட்டபடி இரவு 7 மணிக்கு போட்டி தொடங்கப்பட வில்லை. மழை நின்ற நிலையில் இரவு 9.15 மணிக்கு போட்டி தொடங்கும் எனவும் 9 ஓவர்களை கொண்ட ஆட்டமாக நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

டாஸ் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்ய ஆயத்தமானது. முதலில் பேட் செய்த இந்திய அணி 7 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்திருந்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in