இந்​தி​யா​வுக்கு எதி​ரான 2-வது டெஸ்ட் போட்டி: செனுரன் முத்துசாமி, மார்கோ யான்​சன் அபார ஆட்​டம்: வலு​வான நிலையில் தென் ஆப்​பிரிக்க அணி

இந்​தி​யா​வுக்கு எதி​ரான 2-வது டெஸ்ட் போட்டி: செனுரன் முத்துசாமி, மார்கோ யான்​சன் அபார ஆட்​டம்: வலு​வான நிலையில் தென் ஆப்​பிரிக்க அணி
Updated on
2 min read

குவாஹாட்டி: இந்​தி​யா​வுக்கு எதி​ரான 2-வது கிரிக்​கெட் டெஸ்ட் போட்​டி​யில் தென் ஆப்​பிரிக்க வீரர்​கள் செனுரன் முத்​து​சாமி, மார்கோ யான்​சன் ஆகியோரின் அபார ஆட்​டத்​தால் அந்த அணி முதல் இன்​னிங்​ஸில் 489 ரன்​கள் குவித்​தது.

தென் ஆப்​பிரிக்க அணி இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து டெஸ்ட், ஒரு​நாள், சர்​வ​தேச டி20 போட்​டிகளில் விளை​யாடி வரு​கிறது. கொல்​கத்​தா​வில் நடை​பெற்ற முதல் டெஸ்ட் போட்​டி​யில் தென் ஆப்​பிரிக்க அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்​கில் முன்​னிலை வகிக்​கிறது.

இந்​நிலை​யில் அசாமின் குவாஹாட்​டி​யில் 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 22-ம் தேதி தொடங்​கியது. முதல் நாள் ஆட்​டத்​தில் தென் ஆப்​பிரிக்க அணி முதல் இன்​னிங்​ஸில் 6 விக்​கெட் இழப்​புக்கு 247 ரன்​கள் எடுத்​திருந்​தது. இந்​நிலை​யில் நேற்​றைய 2-வது நாள் ஆட்​டத்​தை, செனுரன் முத்​து​சாமி 25 ரன்​களு​ட​னும், கைல் வெர்​ரைன் ஒரு ரன்​னுட​னும் தொடங்​கினர்.

இரு​வரும் நிதான​மாக விளை​யாடி அணி​யின் ஸ்கோரை வெகு​வாக உயர்த்​தினர். 122 பந்​துகளில் 5 பவுண்​டரி​களு​டன் 45 ரன்​கள் எடுத்​திருந்​த​போது கைல் வெர்​ரைன், ரவீந்​திர ஜடேஜா பந்​து​வீச்சில் ரிஷப் பந்த்​தின் ஸ்டம்​பிங்​கால் அவுட்​டா​னார். 7-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 88 ரன்​கள் குவித்​தது.

இதைத் தொடர்ந்து 8-வது விக்​கெட்​டுக்கு ஜோடி சேர்ந்த செனுரன் முத்​து​சாமி​யும், மார்கோ யான்​சனும் அதிரடி​யாக விளை​யாடி ரன்​கள் குவித்​தனர். இதனால் ஸ்கோர் 400 ரன்​களைக் கடந்​தது. அபார​மாக விளை​யாடிய செனுரன் முத்​து​சாமி சதமடித்​தார்.

டெஸ்ட் போட்​டிகளில் அவர் விளாசும் முதல் சதமாகும் இது. 206 பந்​துகளில் 10 பவுண்​டரி​கள், 2 சிக்​ஸர்​களு​டன் 109 ரன்​கள் குவித்​து, சிராஜ் பந்​து​வீச்​சில் ஜெய்​ஸ்​வாலிடம் பிடி​கொடுத்து ஆட்​ட​மிழந்​தார் அவர். மறு​முனை​யில் தனது விளாசலைத் தொடர்ந்த யான்​சன், அரை சதத்​தைக் கடந்து சதத்தை நெருங்​கி​னார். இதனிடையே சைமன் ஹார்​மரை, பும்ரா போல்​டாக்​கி​னார் அவர் 5 ரன்​கள் மட்​டுமே எடுத்​தார்.

கடைசி விக்​கெட்​டுக்கு ஜோடி சேர்ந்த கேசவ் மஹா​ராஜும், யான்​சனும் நிதான​மாக விளை​யாடினர். ஆனால், குல்​தீப் யாதவ் தனது அபார​மான சுழல்​பந்​தால் யான்​சனை வெளி​யேற்​றி​னார். இதனால் டெஸ்ட் போட்​டிகளில் தனது முதல் சதத்தை விளாச முடி​யாமல் அவர் ஆட்​ட​மிழந்​தார். அவர் 91 பந்​துகளில் 6 பவுண்​டரி​கள்,7 சிக்​ஸர்​களு​டன் 93 ரன்​கள் எடுத்து ஆட்​ட​மிழந்​தார்.

151.1 ஓவர்​களில் 489 ரன்​களுக்கு தென் ஆப்​பிரிக்க அணி ஆட்​ட​மிழந்​தது. இந்​திய அணி தரப்​பில் குல்​தீப் யாதவ் 4, பும்​ரா, சிராஜ், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்​கெட்​களைக் கைப்​பற்​றினர். பின்​னர் தனது முதல் இன்​னிங்ஸை இந்​திய அணி விளை​யாடியது.

தொடக்க ஆட்​டக்​காரர்​களாக யஷஸ்வி ஜெய்​ஸ்​வாலும், கே.எல்​.​ராகுலும் களமிறங்​கினர். 6.1 ஓவர்​களில் இந்​திய அணி 9 ரன்​கள் எடுத்​திருந்​த​போது வெளிச்​சமின்மை காரண​மாக ஆட்​டம் நிறுத்​தப்​பட்​டது. 480 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் தனது முதல் இன்​னிங்ஸை இந்​திய அணி இன்று 3-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாட உள்​ளது. ஜெய்​ஸ்​வால் 7, கே.எல்​.​ராகுல் 2 ரன்​கள் எடுத்து களத்​தில் உள்​ளனர்.

7-வது வீரராக களமிறங்கி சதம்: இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி சதமடித்த தென் ஆப்பிரிக்க வீரர் செனுரன் முத்துசாமிக்கு இது முதல் சதமாகும். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 400 ரன்களைக் கடந்து வலுவான நிலையில் உள்ளது.

இதன்மூலம் இந்தியாவுக்கு எதிராக 7-வது வீரராக களமிறங்கி சதமடித்த 3-வது தென் ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையை முத்துசாமி பெற்றுள்ளார். இதற்கு முன்பு குயிண்டன் டி காக் (111 ரன்கள், விசாகப்பட்டினம், 2019), லான்ஸ் குளூஸ்னர்(102, கேப் டவுன், 1997) ஆகியோர் 7-வது வீரராக இந்தியாவுக்கு எதிராக களமிறங்கி சதமடித்துள்ளனர்.

யார் இந்த செனுரன் முத்​து​சாமி? - இந்​தி​யா​வுக்கு எதி​ரான 2-வது டெஸ்ட் போட்​டி​யில் தென் ஆப்​பிரிக்க வீரர் முத்​து​சாமி டெஸ்ட் போட்​டிகளில் தனது முதல் சதத்தை விளாசி சாதனை படைத்​துள்​ளார். தென் ஆப்​பிரிக்​கா​வில் வசித்து வரும் இவர் இந்​திய வம்​சாவளியைச் சேர்ந்​தவர். தமிழகத்​தில் உள்ள நாகப்​பட்​டினம் ​தான் இவரது தந்தை முத்​து​சாமி​யின் சொந்த ஊராகும். இந்​திய வம்​சாவளி வீரர் என்​ப​தால் செனுரன் முத்​து ​சாமியை, சமூக வலை​தளங்​களில் ரசிகர்​கள் பாராட்டி வரு​கின்​றனர்.

செனுரன் முத்​து​சாமி, டெஸ்ட் போட்​டிகளில் இந்​தி​யா​வுக்கு எதி​ராக 2019-ல் அறி​முக​மா​னார். தென்ஆப்​பிரிக்​கா​வில் 1994-ம் ஆண்டு பிப்​ர​வரி 22-ம் தேதி செனுரன் முத்​து​சாமி பிறந்​தார். தென் ஆப்​பிரிக்​கா​வில் வசித்​தா​லும் தமிழக கலா​சா​ரத்தை தொடர்ந்து பின்​பற்றி வரு​கிறார் செனுரன் முத்​து​சாமி. சமூக அறி​வியலில் பட்​டப்​படிப்பை முடித்த இவர், பள்​ளி​யிலேயே தனது கிரிக்​கெட் வாழ்க்​கை​யைத் தொடங்​கி​னார். 11, 19 வயதுக்​குட்​பட்​டோர் போட்​டிகளில் சிறப்​பாக பரிமளித்த இவர், தேசிய அணிக்கு தேர்​வாகி தற்​போது அனை​வரின் கவனத்​தை​யும் ஈர்த்​துள்​ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in