

டாக்கா: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ள 15 பேர் கொண்ட வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணிக்கு லிட்டன் தாஸ் கேப்டனாக இருப்பார் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகள் வரும் பிப்ரவரி 7-ம் முதல் மார்ச் 8-ம் தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெற இருக்கின்றன.
வங்கதேச அணி விவரம்: லிட்டன் தாஸ் (கேப்டன்), டான்சித் ஹாசன், பர்வேஸ் ஹொசைன் எமோன், சைஃப் ஹாஸன், தவ்ஹித் ஹிருதோய், ஷமிம் ஹொசைன், நசும் அகமது, முஷ்தாபிஸுர் ரஹ்மான், தன்சிம் ஹசன் சகிப், டஸ்கின் அகமது, ஷெயிஃப் உதைன், ஷோரிஃபுல் இஸ்லாம்.
லீக் சுற்றில் வங்கதேச அணிக்கான போட்டிகள் விவரம்: 1.மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக (பிப்ரவரி 7, கொல்கத்தா), 2.இத்தாலிக்கு எதிராக (பிப்ரவரி 9, கொல்கத்தா), 3.இங்கிலாந்துக்கு எதிராக (பிப்ரவரி 14, கொல்கத்தா), 4.நேபாளத்துக்கு எதிராக (பிப்ரவரி17, மும்பை).