

துபாய்: ஆடவருக்கான யு-19 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் 2026ம் ஆண்டு ஜனவரி 15 முதல் பிப்ரவரி 6 வரை ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கான அட்டவணையை ஐசிசி அறிவித்துள்ளது.
23 நாட்கள் நடைபெறும் தொடரில் 41 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இந்தியா யு-19 அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
இதே பிரிவில் அமெரிக்கா, வங்கதேசம், நியூஸிலாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்தியா யு-19 அணி தனது முதல் ஆட்டத்தில் ஜனவரி 15-ல் அமெரிக்காவுடன் மோதுகிறது. தொடர்ந்து 17-ம் தேதி வங்கதேசம், 24-ம் தேதி நியூஸிலாந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது.