“என்ன நடந்தது என்று தெரியவில்லை” - டெல்லி கேப்டன் அக்சர் திகைப்பு

டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல்

டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல்

Updated on
1 min read

புதுடெல்லி: ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 75 ரன்களில் சுருண்டது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் என்ன நடந்தது என்று தனக்குத் தெரியவில்லை என்று டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி கிரிக்கெட் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்து வீசியது. 3.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 8 ரன்கள் எடுத்து டெல்லி அணி தடுமாறியது. ஆர்சிபி சார்பில் புவனேஷ்வர் குமாரும், ஹேசில்வுட்டும் விக்கெட்டுகளை அள்ளினர். சாஹில் பராக், கே.எல்.ராகுல், சமீர் ரிஸ்வி, ஸ்டப்ஸ், அக்சர் படேல், நிதிஷ் ராணா ஆகியோர் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். அபிஷேக் போரல் அந்த அணிக்காக 30 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

16.3 ஓவர்களில் 75 ரன்களுக்கு ஆட்டமிழந்தது டெல்லி. 76 ரன்களை 6.3 ஓவர்களில் எட்டியது ஆர்சிபி. இந்த ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருதை ஹேசில்வுட் வென்றார். 3.3 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருந்தார்.

இந்த ஆட்டம் முடிந்த பிறகு டெல்லி கேப்டன் அக்சர் படேல் கூறியதாவது: “எனக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. இன்று நடந்ததை மறந்துவிட்டு அடுத்த ஆட்டத்தில் கவனம் செலுத்தும் வகையில் நாங்கள் இதை கடந்து செல்ல வேண்டி உள்ளது. கிரிக்கெட்டில் ஒவ்வொரு ஆட்டத்திலும் நீங்கள் செய்த விஷயத்தை சரியாக மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும். அதுதான் முக்கியம்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மிகவும் சவாலானதாக உள்ளது. எந்தவொரு நாளும் எளிதாக இருக்கும் என்று கருத முடியாது. நம் முன் அடுத்து என்ன உள்ளதோ அதில் கவனம் செலுத்தலாம். எதிர்மறையாக இருந்தால் நிச்சயம் ஆட்டத்தில் தோல்வியடைய வாய்ப்புகள் உள்ளது. ஒரு மோசமான ஆட்டம் காரணமாக அணியின் பேட்ஸ்மேன்களை தோல்விக்கு காரணமாக சுட்டுவது சரியல்ல. இதை எங்கள் அணியினரிடம் நான் சொல்வதுண்டு. கடந்த போட்டிகளில் நாங்கள் என்ன செய்தோமோ அதை அடுத்தடுத்த ஆட்டங்களில் செய்ய வேண்டும்.

எதிரணியின் பந்து வீச்சாளர்கள் இருவரும் (ஹேசில்வுட், புவனேஷ்வர்) உலகத்தரம் வாய்ந்த வீரர்கள். அவர் பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவர்கள். எங்கள் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சில ஓவர்கள் விளையாடி இருந்தால் நிச்சயம் ஆட்டத்தின் போக்கு மாறி இருக்கும்” என்றார்.

<div class="paragraphs"><p>டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல்</p></div>
திருச்செந்தூர் கோயிலில் தவெக தலைவர் விஜய் சாமி தரிசனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in