ஹாக்கி இந்தியா லீக்: சூர்மா அபார வெற்றி

ஹாக்கி இந்தியா லீக்: சூர்மா அபார வெற்றி
Updated on
1 min read

சென்னை: ஹாக்கி இந்​தியா லீக் போட்​டி​யில் ஜேஎஸ்​டபிள்யூ சூர்மா அணி அபார வெற்​றியைப் பெற்​றுள்​ளது.

சென்னை எழும்​பூர் மேயர் ராதா கிருஷ்ணன் மைதானத்​தில் இப்​போட்டி நடை​பெற்று வரு​கிறது. நேற்று நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் ஜேஎஸ்​டபிள்யூ சூர்மா கிளப் அணி 3-1 என்ற கணக்​கில் ஹைத​ரா​பாத் தூபான்ஸ் அணியை வீழ்த்​தி​யது.

ஆட்ட நேரத்​தில் இரு அணி​களும் தலா ஒரு கோல் போட்டு சமநிலை​யில் இருந்​தன. சூர்மா அணி​யின் கேப்​டன் ஹர்​மன்​பிரீத் சிங் ஒரு கோலும், ஹைத​ரா​பாத் அணி​யின் அமன்​தீப் லக்ரா ஒரு கோலும் அடித்​தனர்.

இதையடுத்து வெற்​றியைத் தீர்​மானிக்க பெனல்டி ஷூட்​-அவுட் முறை கடைப்​பிடிக்​கப்​பட்​டது. இதில் சூர்மா கிளப் அணி 3 கோல்​களை​யும், ஹைத​ரா​பாத் அணி ஒரு கோலை​யும் போட்​டது. இதையடுத்து சூர்மா கிளப் அணி 3-1 என்​ற கணக்​கில்​ வெற்​றியை வசப்​படுத்​தியது.

ஹாக்கி இந்தியா லீக்: சூர்மா அபார வெற்றி
இங்கிலாந்து வீரர்களின் ‘குடிபோதை’ கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும் - மைக்கேல் வான் காட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in