ஹாக்கி இந்தியா லீக்: அக்கார்டு தமிழ்நாடு டிராகன்ஸ் அணி அறிமுகம்

ஹாக்கி இந்தியா லீக்: அக்கார்டு தமிழ்நாடு டிராகன்ஸ் அணி அறிமுகம்
Updated on
1 min read

சென்னை: ஹாக்கி இந்​தியா லீக் தொடரில் பங்​கேற்​கும் அக்​கார்டு தமிழ்​நாடு டிராகன்ஸ் அணி​யின் அறி​முக விழா, சென்னை தியாக​ராய நகரில் நடை​பெற்​றது.

விழா​வில், அணி​யின் உரிமை​யாள​ரும், பாரத் பல்​கலைக்​கழகத்​தின் நிர்​வாக இயக்​குனரு​மான டாக்​டர் ஸ்வேதா சந்​தீப் ஆனந்த் அறி​முகம் செய்து வைக்​கப்​பட்​டார். அதனைத் தொடர்ந்​து, அணி​யின் அதி​காரப்​பூர்வ சின்​னம், அணி வீரர்​கள் அணி​யும் புதிய சீருடை ஆகியவை வெளி​யிடப்​பட்​டன.

ஆசிய ஹாக்கி கூட்​டமைப்​பின் ‘வியூ​கம் மற்​றும் திட்​ட​மிடல்’ ஆலோ​சனைக் குழு​வின் தலை​வரும், அக்​கார்டு குழு​மத்​தின் நிர்வாக இயக்​குனரு​மான டாக்​டர் சந்​தீப் ஆனந்த், ஹாக்கி இந்தியாவின் பொருளாள​ரும் தமிழ்​நாடு ஹாக்கி அமைப்​பின் தலைவருமான சேகர் மனோகரன், அணி​யின் உதவி பயிற்சியாளர் விக்​ரம் காந்த், அக்​கார்டு தமிழ்​நாடு டிராகன்ஸ் அணி​யின் முதன்மை செயல் அதி​காரி ஜோசப் மற்​றும் அணி​யின் கேப்​டன் அமித் ரோஹி​தாஸ் உள்​ளிட்​டோர் நிகழ்ச்​சி​யில்​ பங்கேற்றனர்​.

ஹாக்கி இந்தியா லீக்: அக்கார்டு தமிழ்நாடு டிராகன்ஸ் அணி அறிமுகம்
கொம்புசீவி: திரைப் பார்வை - விஜயகாந்த் மகனின் காமெடி என்டர்டெய்னர் எப்படி?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in