ஜஸ்பிரீத் பும்ரா கடும் சவால் அளித்தார்: சதம் விளாசிய ஹென்றி நிக்கோல்ஸ் பாராட்டு

ஹென்றி நிக்கோல்ஸ்

ஹென்றி நிக்கோல்ஸ்

Updated on: 
1 min read

வெலிங்டன்: வெலிங்​டனில் நேற்று தொடங்​கிய இந்​தி​யா​வுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்​டி​யில் நியூஸிலாந்து பேட்​ஸ்மேனான ஹென்றி நிக்​கோல்ஸ் (113*) சதம் விளாசி அணியை சரி​வில் இருந்து மீட்​டார். முதல் நாள் ஆட்​டத்​துக்கு பின்​னர் ஹென்றி நிக்​கோல்ஸ் கூறிய​தாவது:

ஜஸ்பிரீத் பும்​ராவின் பந்​து​வீச்சு முறை மிகவும் வித்​தி​யாச​மானது. அதிர்​ஷ்ட​வச​மாக அவருக்கு எதிராக ஏற்​கெனவே சில முறை விளை​யாடியுள்​ளேன். இத​னால் அவரைப் பற்றி ஓரளவுக்​குத் தெரியும். இருப்​பினும், அனைத்து வகை​யான கிரிக்​கெட்​டிலும் அவர் மிகச்​சிறந்த பந்​து​வீச்​சாளர்.

வெலிங்​டன் டெஸ்ட் போட்​டி​யில் அவர், பந்தை இருபுறமும் ஸ்​விங் செய்த விதம் வியப்​பளித்​தது. 2-வது நாள் ஆட்​டத்​தின் தொடக்​கத்​திலும் இதேபோன்ற பந்​து​வீச்சை எதிர்​கொள்ள வேண்​டி​யிருக்​கும். அது மீண்​டும் கடினமான சவாலாக இருக்​கும். முதல் பகுதி ஆட்​டத்​தில் இந்​திய பந்​து​வீச்​சாளர்​கள் சிறப்​பாகச் செயல்​பட்டு எங்​களுக்கு கடும் நெருக்​கடி கொடுத்​தனர். ஆட்​டத்​தில் எங்​களின் நிலைமை இதைத் தெளிவாகக் காட்​டியது.

கிளென் பிலிப்​ஸுடனான பார்ட்​னர்​ஷிப் எனது ஆட்​டத்தை எளிதாக்​கியது. அவர், தாக்​குதல் ஆட்​டம் மேற்​கொண்​ட​தால் எனக்கு நம்​பிக்கை கிடைத்​தது. பிலிப்ஸ் சிறந்த வீரர். அவரது அதிரடி ஆட்​டமும், ரன்​களுக்கு இடையே வேக​மாக ஓடுவதும் சிறப்​பானது. எங்​கள் இரு​வருக்​கும் இடையே நல்ல புரிதல் இருக்​கிறது. இரு​வருமே தொடர்ந்து ரன்​கள் சேர்ப்​ப​தில் ஆர்​வம் காட்​டு​கிறோம்.

இந்​திய பந்​து​வீச்​சாளர்​கள் சிறப்​பான பந்​துகளை வீசினால், அதை ஏற்​றுக்​கொண்டு பொறுமையாக விளை​யாட வேண்​டும். நம்​மால் கட்​டுப்​படுத்​தக்​கூடிய விஷயங்​களில் கவனம் செலுத்தி, கிடைக்​கும் வாய்ப்​பு​களை ரன்​களாக மாற்ற வேண்​டும் என நாங்​கள் முடிவு செய்து அதற்கு ஏற்​றவாறு விளை​யாடினோம். 2-வது நாள் ஆட்​டத்​தில் முடிந்​தவரை அதிக ரன்​களைச் சேர்க்க விரும்​பு​கிறோம்.

கிளென் பிலிப்​ஸும் நானும் ஆட்​ட​மிழக்​காமல் களத்​தில் இருப்​பது மகிழ்ச்சி அளிக்​கிறது. மீண்​டும் கடினமாக உழைத்து ரன்​கள் சேர்ப்​பதே எங்​களின் இலக்கு. இவ்​வாறு ஹென்றி நிக்​கோல்ஸ் கூறினார்.

<div class="paragraphs"><p>ஹென்றி நிக்கோல்ஸ்</p></div>
முகமது சிராஜை சேர்க்காதது தவறான முடிவு கிடையாது: சொல்கிறார் சிதான்ஷு கோடக்

X