

சென்னை: 3-வது ஹெச்சிஎல் தேசிய இரட்டையர் ஸ்குவாஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் சுற்றில் தமிழகத்தைச் சேர்ந்த குகன் செந்தில்குமார், சந்தேஷ் ஜோடி 11-1, 11-2 என்ற நேர் செட் கணக்கில் மேற்கு வங்கத்தின் நமன் சுரானா, பிரனவ் அகர்வால் ஜோடியை தோற்கடித்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.