

குமமோட்டோ: ஜப்பானின் குமமோட்டோ நகரில் ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் காயத்ரி கோபிசந்த், ட்ரீசா ஜாலி ஜோடி 21-17, 21-14 என்ற செட் கணக்கில் ஜப்பானின் ஹினாடா சுஸுகி, நாவோ யமகிதா ஜோடியை வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா, ராதிகா சர்மா ஜோடி 16-21, 15-21 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் சென் ஷி யி, பிரான்செஸ்கா கார்பெட் ஜோடியிடம் தோல்வி அடைந்தது.
ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஹரிகரண் அம்சகருணன், அர்ஜூன் ஜோடி, மலேசியாவின் ஆரோன் சியா, சோ வூய் யிக் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் ஹரிகரண் அம்சகருணன், அர்ஜூன் ஜோடி ஜோடி முதல் செட்டில் 11-6 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த நிலையில் மலேசிய ஜோடி காயம் காரணமாக வெளியேறியது. இதனால் இந்திய ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.