பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்: இறுதிச் சுற்றில் பி.வி.சிந்து தோல்வி

ஆன் சே யங் உடன் பி.வி.சிந்து

ஆன் சே யங் உடன் பி.வி.சிந்து

Updated on: 
1 min read

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தோல்வி கண்டார். பிரான்ஸில் பாரிஸ் நகரில் இப்போட்டிகள் நடைபெற்று வந்தன.

நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் ஒலிம்பிக் போட்டிகளில் 2 முறை பதக்கம் வென்றவரான பி.வி. சிந்துவும், உலக பாட்மிண்டன் வீராங்கனைகளின் தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவரும், தென் கொரியாவைச் சேர்ந்தவருமான ஆன் சே யங்கும் மோதினர்.

இதில் ஆன் சே யங் 16-21, 21-11, 21-12 என்ற கணக்கில் பி.வி. சிந்துவை வீழ்த்தி பட்டம் வென்றார்.ஆன் சே யங்கிடம் தொடர்ச்சியாக 11 போட்டிகளில் பி.வி.சிந்து தோல்வி கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

<div class="paragraphs"><p>ஆன் சே யங் உடன் பி.வி.சிந்து</p></div>
அகமதாபாத்தில் உலக சீனியர் பளுதூக்குதல் போட்டி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in