

லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டனான அசார் அலி, பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழு உறுப்பினராகவும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் இளைஞர் மேம்பாட்டுத் துறைக்கு தலைவராகவும் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் இந்த இரு பதவிகளையும் அவர், தற்போது ராஜிநாமா செய்துள்ளார். கடந்த வார தொடக்கத்தில் அசார் அலி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ராஜிநாமா கடித்தத்தை அனுப்பியதாகவும், தற்போது அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சமீபத்தில் மற்றொரு முன்னாள் கேப்டனான சர்பராஸ் கானிடம் ஷாகீன்ஸ் மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணிகளின் மொத்த பொறுப்பையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வழங்கியது.
இது தொடர்பாக அசார் அலியிடம் எந்தவித ஆலோசனையும் செய்யப்படவில்லை. மேலும் அவரது யோசனைகளுக்கு வாரியம் செவிசாய்க்கவில்லை என்றும் கூறப்படுகிறது.