2027 உலகக் கோப்பைக்கு பின்னர் ஒருநாள் போட்டிகளின் எதிர்காலம் எப்படி? - அஸ்வின் கவலை

2027 உலகக் கோப்பைக்கு பின்னர் ஒருநாள் போட்டிகளின் எதிர்காலம் எப்படி? - அஸ்வின் கவலை
Updated on
1 min read

சென்னை: 2027-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்​டிக்​குப் பின்​னர் ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டிகளின் எதிர்​காலம் எப்​படி இருக்​கும் என்று தெரிய​வில்லை என்று இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் வீரர் ரவிச்​சந்​திரன் அஸ்​வின் கவலை தெரிவித்துள்​ளார்.

இதுதொடர்​பாக இந்தி யுடியூப் சேனலுக்கு அளித்த பேட்​டி​யில் ரவிச்​சந்​திரன் அஸ்​வின் கூறிய​தாவது: "தற்​போது நாட்​டின் பல நகரங்​களில் விஜய் ஹசாரே கோப்​பைக்​கான கிரிக்​கெட் போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதில் ரோஹித் சர்​மா, விராட் கோலி போன்ற நட்​சத்​திர வீரர்​கள் தங்​கள் மாநில அணி சார்​பில் பங்​கேற்று விளை​யாடி வரு​கின்​றனர். இது மிகப்​பெரிய உற்​சாகத்தை கிரிக்​கெட் வீரர்​களிடையே ஏற்​படுத்​தி​யுள்​ளது.

தற்​போது அதிக அளவில் சர்​வ​தேச டி20 போட்​டிகள், டி20 லீக் ஆட்டங்​கள் நடத்​தப்​பட்டு வரு​கின்​றன. அதைப்போலவே டெஸ்ட் போட்​டிகளும் அதிக அளவில் நடத்​தப்​படு​கின்​றன. அதே நேரத்தில் ஒரு​நாள் போட்​டிகள் நடத்​தப்​படு​வது மெல்ல மெல்​லக் குறைந்து வரு​கிறது. 2027ம் ஆண்டு நடை​பெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்​டிக்​குப் பிறகு ஒரு​நாள் போட்​டிகளின் நிலைமை எப்​படி இருக்​கும் என்று தெரிய​வில்​லை. இந்​தப் போட்டிக்​குப் பின்​னர் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற ஜாம்​ப​வான்​கள் ஓய்வு பெற்று விடு​வர்.

விஜய் ஹசாரே போட்​டி​யில் ரோஹித்​தும், விராட் கோலி​யும் விளை​யாடத் தொடங்​கிய பின்​னர் அந்​தப் போட்​டியை ஏராளமான ரசிகர்​கள் பார்க்​கத் தொடங்​கி​விட்​டனர். விளையாட்டில் தனி நபர்​களை விட விளை​யாட்​டு​தான் முக்​கி​யம் என்​பது அனை​வருக்​கும் தெரி​யும். ஆனால் விஜய் ஹசாரே போட்டி போன்று பல கால​மாக நடத்​தப்​பட்டு வரும் போட்டிகளுக்கு கூட விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற நட்சத்​திர விளை​யாட்டு வீரர்​களை விளை​யாட வைக்க வேண்​டிய நிலை உள்​ளது.

டெஸ்ட் போட்​டிகள், சர்​வ​தேச டி20 போட்​டிகளுக்கு கொடுக்​கப்​படும் முக்​கி​யத்​து​வத்தை 50 ஓவர் போட்​டிகளுக்​கும் நாம் கொடுக்க வேண்​டும். ஆண்​டு​தோறும் குறிப்​பிட்ட அளவில் சர்வதேச ஒரு​நாள் போட்​டிகளை நடத்த ஐசிசி ஏற்​பாடு செய்​ய​வேண்​டும். தற்​போது ஆண்​டு​தோறும் ஐசிசி சார்​பில் ஒரே ஒரு 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி நடத்​தப்​படு​கிறது.

அதே​போல் 2 ஆண்​டு​களுக்கு ஒரு​முறை டி20 உலகக் கோப்பை போட்டி நடத்​தப்​படு​கிறது. வரு​வாயைப் பெருக்​கும் நோக்​கில் நடத்​தப்​பட்​டாலும், சர்​வ​தேச ஒரு​நாள் போட்​டிகளுக்​கும் முக்கியத்து​வம் தரவேண்​டும். உலகக் கோப்பை கால்​பந்​துப் போட்​டியை, உலக கால்​பந்து சம்​மேளனம்​ (பி​பா) 4 ஆண்டுகளுக்கு ஒரு​முறை ​தான் நடத்​துகிறது.

அதே​போல் ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்​டி, ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி ஆகிய​வற்றை 4 ஆண்டுகளுக்கு ஒரு​முறை மட்​டுமே நடத்​த வேண்​டும்.இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

2027 உலகக் கோப்பைக்கு பின்னர் ஒருநாள் போட்டிகளின் எதிர்காலம் எப்படி? - அஸ்வின் கவலை
ரியல் மாட்ரிட் கால்பந்து வீரர் கிளியான் மாப்பே காயம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in