அடுத்த சுற்றுக்கு அமெரிக்கா முன்னேற்றம் | FIFA WC 2026

அடுத்த சுற்றுக்கு அமெரிக்கா முன்னேற்றம் | FIFA WC 2026
Updated on
1 min read

கலிபோர்னியா: உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் குரூப் டி பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் துருக்கி 3-2 என்ற கோல் கணக்கில் அமெரிக்க அணியைத் தோற்கடித்தது. கடைசி லீக் ஆட்டத்தில் தோல்வி அடைந்தாலும், அதிக புள்ளிகளுடன் நாக்-அவுட் சுற்றுக்கு அமெரிக்கா தகுதி பெற்றுள்ளது.

இந்த ஆட்டம் லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள சோஃபி மைதானத்தில் நேற்று காலை 7.30 மணிக்கு நடைபெற்றது. துருக்கி அணி சார்பில் அர்டா குலர் (10-வது நிமிடம்) பாரிஸ் அல்பர் இல்மாஸ் (31-வது நிமிடம்), கான் அய்ஹான் (90+8-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர்.

அமெரிக்க அணி தரப்பில் ஆஸ்டன் டிரஸ்டி (3-வது நிமிடம்), செபாஸ்டியன் பெர்ஹால்ட்டர் (49-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர். குரூப் டி பிரிவில் அமெரிக்கா 6 புள்ளிகள், ஆஸ்திரேலியா 4 புள்ளிகளுடன் முதல் 2 இடங்களைப் பிடித்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. துருக்கி 3 புள்ளிகளை மட்டுமே பெற்று தொடரிலிருந்து வெளியேறியது.

அடுத்த சுற்றுக்கு அமெரிக்கா முன்னேற்றம் | FIFA WC 2026
குராசாவோ தோல்வி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது ஐவரி கோஸ்ட் | FIFA WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in