200 போட்டிகளில் விளையாடி லூகா மோட்ரிக் சாதனை | FIFA WC 2026

200 போட்டிகளில் விளையாடி லூகா மோட்ரிக் சாதனை | FIFA WC 2026
Updated on
1 min read

டொரண்டோ: உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் லீக் ஆட்டத்தில் நேற்று குரோஷியா 1-0 என்ற கணக்கில் பனாமா அணியை வென்றது. இந்தப் போட்டியானது குரோஷிய அணி வீரர் லூகா மோட்ரிக்குக்கு 200-வது சர்வதேச போட்டியாக அமைந்தது. ஒரு நாட்டுக்காக 200 சர்வதேச போட்டிகளில் விளையாடிய 4-வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

இதற்கு முன்பு போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டா (230 போட்டிகள்), குவைத்தின் படேர் அகமது அல்-முதவா(202 போட்டிகள்), அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்ஸி (201 போட்டிகள்) ஆகியோர் 200 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளனர்.

200 போட்டிகளில் விளையாடி லூகா மோட்ரிக் சாதனை | FIFA WC 2026
‘பாலன்’ படம் எப்படி? - வீடியோ விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in