ஆஸ்​திரி​யா​வுடன் அல்ஜீரியா டிரா | FIFA WC 2026

ஆஸ்​திரி​யா​வுடன் அல்ஜீரியா டிரா | FIFA WC 2026
Updated on
1 min read

கன்​சாஸ் சிட்டி: உலகக் கோப்பை கால்​பந்​துப் போட்​டி​யின் ஜே பிரிவு லீக் ஆட்​டத்​தில் அல்ஜீரியா, ஆஸ்​திரி​யா அணி​கள் மோதிய ஆட்​டம் 3-3 என்ற கணக்​கில் டிரா​வில் முடிவடைந்​தது.

இந்த ஆட்​டம் கன்​சாஸ் சிட்​டி​யிலுள்ள ஆரோஹெட் மைதானத்​தில் நேற்று காலை 7.30 மணிக்கு தொடங்​கியது. அல்​ஜீரியா அணிக்​காக ரபிக் பெல்​காலி 45-வது நிமிடத்​தில் ஒரு கோலும், ரியாய் மாரெஸ் 60, 90+3-வது நிமிடத்​தில் 2 கோல்​களும் அடித்​தனர். ஆஸ்திரியா அணிக்​காக மார்க்கோ அர்​ணாவ்​டோவிக் (28-வது நிமிடம்), மார்​செல் சாபிடைசர் (55-வது நிமிடம்), சசா கலாஜ்ட்​ஜிக் (90+6-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்​தனர்.

இறு​திவரை இந்த நிலை நீடிக்​கவே ஆட்​டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிரா​வில் முடிவடைந்​தது. லீக் சுற்​றின் முடி​வில் ஜே பிரிவில் அர்​ஜெண்​டினா 9 புள்​ளி​களும், ஆஸ்​திரி​யா, அல்​ஜீரியா ஆகிய அணி​கள் தலா 4 புள்​ளி​களும் பெற்று நாக்​-அவுட் சுற்​றுக்கு முன்​னேறின.

இங்​கிலாந்து அபார வெற்றி

உலகக் கோப்பை கால்​பந்​துப் போட்​டி​யின் எல் பிரிவு சுற்​றில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கோல் கணக்​கில் பனாமா அணியைத் தோற்​கடித்து நாக்​-அவுட் சுற்​றுக்கு முன்​னேறியது. குரூப் எல் பிரி​வில் லீக் ஆட்​டங்​களின் முடி​வில் இங்​கிலாந்து 7 புள்ளிகளும், குரோஷியா 6 புள்​ளி​களும், கானா 4 புள்​ளி​களும்​ பெற்​று நாக்​-அவுட்​ சுற்​றுக்​கு முன்​னேறின.

காங்கோ முன்னேற்றம்

கே பிரிவு லீக் ஆட்​டத்​தில் காங்கோ அணி 3-1 என்ற கோல் கணக்கில் உஸ்​பெகிஸ்​தானை வீழ்த்தி நாக்​-அவுட் சுற்​றில் கால்பதித்​தது. கே பிரிவு லீக் சுற்​றின் முடி​வில் கொலம்​பியா 7 புள்ளி​களும், போர்ச்​சுகல் 5 புள்​ளி​களும், காங்கோ 4 புள்​ளி​களும் பெற்று நாக்​-அவுட் சுற்​றுக்கு தகுதி பெற்​றன.

ஆஸ்​திரி​யா​வுடன் அல்ஜீரியா டிரா | FIFA WC 2026
மகளிர் டி20 உலகக் கோப்பை: அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறியது இந்தியா

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in