பந்து சேத விவகாரத்துக்கு பிறகு ஸ்டீவ் ஸ்மித் மீது மரியாதை அதிகமானது ஏன்? - மனம் திறக்கும் டுபிளெசிஸ்

ஸ்டீவ் ஸ்மித், டுபிளெசிஸ்

ஸ்டீவ் ஸ்மித், டுபிளெசிஸ்

Updated on: 
2 min read

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டைப் புரட்டிப்போட்ட 2018 தென் ஆப்பிரிக்கா தொடர் பந்து சேத விவகார (‘சான்ட் பேப்பர் கேட்’) தவற்றின் போது தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டுபிளெசிஸ் அப்போதைய ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திடம் சொன்னது குறித்து இப்போது மனம் திறந்துள்ளார்.

கிரிக் இன்போவின் ‘கிரிக்கெட்டர்கள் பற்றி கிரிக்கெட்டர்கள்’ என்னும் வீடியோ நிகழ்ச்சியில் இது தொடர்பாக டுபிளெசிஸ் கூறும் போது ஹோபார்ட்டில் ஒரு டெஸ்ட் போட்டியின் போது டுபிளெசிஸ் பந்தைச் சேதம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த போது ஸ்டீவ் ஸ்மித் அவருக்கு ஆதரவாக இருந்துள்ளதையும் குறிப்பிட்டார்:

‘2018-ல் கேப்டவுனில் நடந்த சம்பவத்துக்குப் பிறகு, ஸ்டீவ் ஸ்மித் செய்தியின் முடிவில் வந்து, “நான் இதற்குப் பொறுப்பேற்கிறேன்” என்றார். அதற்கு நாங்கள், “நீங்கள் ஏன் பொறுப்பேற்கிறீர்கள்? நீங்கள் எந்தத் தவறும் செய்யவில்லையே” என்றோம்.

அதன் பிறகு ஊடகங்கள் அவருக்கு கொடுத்த அழுத்தம் மிகப்பெரியதாக மாறியது. உடனடியாக எனக்கு, இது ஸ்டீவ் ஸ்மித்தின் தவறு அல்ல; நான் பந்து சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட சம்பவத்தைப் போலத்தான் இதுவும் என்று தோன்றியது.

அவர் இதை எதிர்கொண்டு வந்தபோது, “நீங்கள் சந்திக்கும் இந்தச் சூழ்நிலைக்காக நான் மிகவும் வருந்துகிறேன். மன உறுதியுடன் இருங்கள். இன்னும் ஒரு வாரம் மிகவும் கடினமாக இருக்கும்; அதன் பிறகு எல்லாம் சரியாகிவிடும்” என்று அவருக்கு தகவல் அனுப்பினேன். ஆனால், அவர் இதை எதிர்கொள்ள ஒரு வருடம் ஆகும் என்று அப்போது எனக்குத் தெரியவில்லை. “நாங்கள் உங்களுக்குப் பின்னால் இருக்கிறோம். நீங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். எங்களிடமிருந்து உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால், நாங்கள் இருக்கிறோம்.

அப்போது எங்கள் அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் இருந்தபோது, உண்மையாகச் சொன்னால், பெரிதாக எதுவும் தவறாக நடந்துவிட்டதாக நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் எல்லா இடங்களிலும் கேமராக்கள் இருந்தன. அந்த விஷயம் படிப்படியாக பெரிதாக்கப்பட்டு, உலகம் முழுவதும் பேசப்படும் அளவுக்கு சென்றது. திடீரென நான் மிகப்பெரிய பிரச்சினையில் சிக்கியவன் போல் ஆனேன். “ஏமாற்றுக்காரர்” என்று உலகம் முழுவதும் ஸ்டீவ் ஸ்மித்தை மக்கள் பேசத் தொடங்கினர். அது மனதில் மிகப்பெரிய சுமையாக இருந்தது.

என் மீது இதே போல் பந்தில் மிண்ட் சாற்றை வைத்துத் தேய்த்ததாக பந்து சேதக் குற்றச்சாட்டு எழுந்த போது ஸ்டீவ் ஸ்மித்திடம் டுபிளெசிஸ் மற்றும் ‘மின்ட்கேட்’ குறித்து உங்கள் கருத்து என்ன? அவர் மோசடி செய்தது மிகவும் மோசமானது அல்லவா?” என்று மீடியாக்கள் கேட்டன. அதற்கு ஸ்மித், “இல்லை, அவர் மோசடி செய்யவில்லை. அவர் பந்தை பளபளப்பாக்கிக் கொண்டிருக்கிறார். நானும் பல அணிகளில் விளையாடியிருக்கிறேன். அப்போது பந்தை பளபளப்பாக்குவதற்காக வெவ்வேறு இனிப்புப் பொருட்களைப் பயன்படுத்தியிருக்கிறோம் என்று ஸ்டீவ் ஸ்மித் கூறியதை நன்றியுடன் இன்று நினைவு கூர்கிறேன்.

நாங்கள் அதை தொலைக்காட்சியில் கேட்டுக்கொண்டிருந்தோம். எங்கள் அணியில் இருந்த அனைவரும், “வாவ்! அவர் இதைச் செய்ய வேண்டிய அவசியமே இல்லை” என்று கூறினோம். ஆனால், அப்போது அவர் அழுத்தத்திற்கு அடிபணிவதற்குப் பதிலாக, மனிதநேயத்தையும் சரியான விஷயத்தையும் தேர்வு செய்தார். அதை நேரில் பார்த்தது எனக்கு மிகவும் ஆச்சரியமாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது.

அன்று ஸ்டீவ் ஸ்மித் எடுத்த அந்த முடிவு தென் ஆப்பிரிக்க அணிக்கு மிகுந்த அர்த்தம் கொண்டதாக இருந்தது. அதற்காக ஸ்டீவ் ஸ்மித் மீது எங்களுக்கு இருந்த மரியாதையும் பல மடங்கு அதிகரித்தது.’ இவ்வாறு கூறினார் டுபிளெசிஸ்.

<div class="paragraphs"><p>ஸ்டீவ் ஸ்மித், டுபிளெசிஸ்</p></div>
பிரான்ஸ் நாட்டில் மீண்டும் மோதல்: 1,000 பேரை கைது செய்த போலீஸார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in