ஆஸ்திரேலியா​வுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி

ஆஸ்திரேலியா​வுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி
Updated on: 
1 min read

அடிலெய்ட்: ஆஸ்திரேலியா​வுக்கு எதிரான ஒருநாள் கிரிக்​கெட் போட்​டி​யில் இங்​கிலாந்து அணி 135 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது.

அடிலெய்​டில் நேற்று நடை​பெற்ற 2-வது ஒருநாள் போட்​டி​யில் முதலில் விளை​யாடிய இங்​கிலாந்து 50 ஓவர்​களில் 6 விக்​கெட் இழப்​புக்கு 355 ரன்​கள் குவித்​தது. டாம் பேன்​டன் 121 ரன்​களை (99 பந்​துகள், 12 பவுண்​டரி, 4 சிக்​ஸர்) விளாசினார். பின்​னர் விளை​யாடிய ஆஸ்திரேலிய அணி 44.3 ஓவர்​களில் 220 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்து தோல்வி கண்​டது.

முதல் போட்​டி​யில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்​றிருந்த நிலை​யில் தற்​போது இந்த ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்​கில் சமநிலை​யில் உள்​ளது.

அற்​புத​மாக விளை​யாடி சதமடித்த டாம் பேன்​டன் ஆட்​டநாயக​னாகத் தேர்​வானார். இவ்​விரு அணிகளுக்கு இடை​யி​லான 3-வது ஒருநாள் கிரிக்​கெட் போட்டி வரும் 18-ம் தேதி ஹோபர்ட் நகரில் நடை​பெறவுள்​ளது.

ஆஸ்திரேலியா​வுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி
“12 வருட ஆட்சியில் பிரதமர் மோடி மீது ஊழல் குற்றச்சாட்டே இல்லை” - அமித் ஷா பேச்சு

X