முன்​வரிசை​யில் தோனி களமிறங்க வேண்​டும்: டி வில்லியர்ஸ் யோசனை

முன்​வரிசை​யில் தோனி களமிறங்க வேண்​டும்: டி வில்லியர்ஸ் யோசனை
Updated on
2 min read

மும்பை: வரும் ஐபிஎல் கிரிக்​கெட் தொடரில் சிஎஸ்கே அணி​யின் நட்​சத்​திர வீரர் எம்​.எஸ்​.தோனி முன்​வரிசை​யில் களமிறங்​கு​வது சிறப்​பாக இருக்​கும் என்று தென் ஆப்பிரிக்க அணி​யின் முன்​னாள் வீரர் ஏ.பி. டிவில்லியர்ஸ் தெரி​வித்​தார்.

இதுதொடர்​பாக ஜியோ ஸ்டாருக்கு அளித்த பேட்​டி​யில் டிவில்லியர்ஸ் கூறிய​தாவது: வரும் 28-ம் தேதி தொடங்​கும் 2026-ம் ஆண்​டுக்​கான ஐபிஎல் கிரிக்​கெட் போட்டி மிக​வும் சிறப்​பான முறை​யில் இருக்​கும் என்று நான் நினைக்கிறேன். ஐபிஎல் போட்டி தொடங்​கியது முதல் சென்னை சூப்​பர் கிங்ஸ் (சிஎஸ்​கே) அணிக்​காக தோனி விளை​யாடி வரு​கிறார். அந்த அணி 5 முறை கோப்​பையை வென்​றதற்கு தோனி​யின் பங்​களிப்பு அதி​க​மாகும்.

கடந்த சில ஆண்​டு​களாக அவர் ஆட்​டத்​தின் கடைசி சில ஓவர்​களில் களமிறங்கி பினி ஷருக்​கான பணி​யைச் செய்து வரு​கிறார். அவர் அப்​படி செய்யக் கூடாது. அவர் முன்​வரிசையில் வந்து விளை​யாடு​வது அணிக்கு நல்​லது. நான்​கு, ஐந்து அல்​லது ஆறாவது இடங்​களில் இறங்கி விளை​யாடலாம். எப்​போதும் முன்​வரிசை​யில் அவர் இறங்கி விளை​யாட வேண்​டும் என்று நான் கூற​வில்​லை.

பேட்​டிங் வரிசை​யில் முன்னதாக இறங்​கும்​போது அது தாக்கத்தை ஏற்​படுத்​தும். தோனி கேப்​ட​னாக இல்லாததால் 7 அல்​லது 8-வது இடத்​தில் இறங்கி விளையாடு​கிறார். இந்த வரிசை​யில் விளை​யாடும்​போது அவருக்கு போது​மான பங்கு இல்​லாமல் போய்​விடு​கிறது என்று நான் நினைக்​கிறேன். அவரது பேட்​டிங் எவ்​வளவு பெரி​யத் தாக்​கத்தை ஏற்​படுத்​தும் என்று எனக்​குத் தெரியும்.

44 வயதி​லும் தோனி​யின் பங்கு அணிக்கு கூடு​தல் வலுவைப் பெற்​றுத் தரு​கிறது. எனவே, அவர் முன்வரிசையில் களமிறங்கி விளை​யாட​வேண்​டும். மேலும், சிஎஸ்கே அணி​யில் தற்​போது சஞ்சு சாம்​சன் வந்​திருக்​கிறார். இந்த சீசனில் அவருக்கு மிகப்​பெரிய பொறுப்பு காத்​திருக்​கிறது. பொறுப்பை ஏற்க மிகச் சரியான வீர​ராக சஞ்சு சாம்​சன் இருக்​கிறார்.

அணிக்கு சஞ்சு சாம்சனை அழைத்து வந்த பெருமை தோனியையே சாரும். சரி​யான நபருக்​காக அவர் ​(தோனி) காத்​திருக்​கிறார். அழுத்​தங்​கள் இருக்​கும் போட்​டிகளில் சஞ்சு சாம்​சன் தனக்​கான பொறுப்பை உணர்ந்து அதற்கேற்ப விளை​யாட வேண்​டும். அப்​போது​தான் மிகப்​பெரிய சவாலாக இருக்​கும் போட்​டிகளை அவரால் எளிதாக கையாள முடி​யும். அதற்​கான சந்​தர்ப்​பத்தை சஞ்சு சாம்​சனுக்​கு ஏற்​படுத்​தித்​ தரவேண்​டும்​ என்​று நான்​ கோரு​கிறேன்​. இவ்​​வாறு டிவில்​லியர்​ஸ்​ தெரி​வித்​​தார்​.

ஜெர்ஸி எண் மாறுகிற​தா?

இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் கேப்​ட​னும், சென்னை சூப்​பர் கிங்ஸ் (சிஎஸ்​கே) அணி​யின் வீரரு​மான எம்​.எஸ்​.தோனி​யின் ஜெர்ஸி எண் மாறு​வ​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. தோனி, இந்​திய அணிக்​காக விளையாடிய​போது 7-ம் எண் ஜெர்​ஸியை அணிந்திருந்தார். சிஎஸ்​கே-வுக்​காக விளை​யாடும்​போது 7-ம் எண் ஜெர்​ஸியை அவர் அணிந்​து​வந்​தார்.

இந்​நிலை​யில், தான் இனிமேல் நம்​பர் 7 ஜெர்​ஸியை பயன்படுத்​த​போவ​தில்லை என்​றும், நம்​பர் 8-க்கு மாறப் போவ​தாக​வும் தோனி​யின் அதி​காரப்​பூர்வ சமூக வலைதள பக்​கத்​தில் நேற்று தகவல் வெளி​யாகி​யுள்​ளது. தோனி​யின் அதி​காரப்​பூர்வ பேஸ்​புக் பக்​கத்​தில் உள்ள பதிவில், “சில எண்​கள் உங்​களு​டன் நீடித்து இருக்​கும், அப்படி​யான எண்​களில் ஒன்​று​தான் 7. ஆனால் இன்​று.. 8-ம் எண்​ணுக்கு மாறுகிறேன். இதற்​கான காரணத்தை விரைவில் நீங்​கள் அறிவீர்​கள்” என்று பதி​விடப்​பட்​டுள்​ளது. மேலும் அதனுடன் நம்​பர் 7-லிருந்து 8-க்கு மாற்​றப்​பட்ட ஜெர்​ஸி​யின் வீடியோ​வும் இணைக்​கப்​பட்​டுள்​ளது.

முன்​வரிசை​யில் தோனி களமிறங்க வேண்​டும்: டி வில்லியர்ஸ் யோசனை
234 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கும் தவெக? - நான்கு முனை போட்டிக்கு தயாராகும் தமிழகம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in