சஞ்சு சாம்சன், கார்த்திக் சர்மாவுக்கு ரூ.32.30 கோடி செலவு செய்த சிஎஸ்கே: இறுதிக் கட்டத்தை நோக்கி பயணிக்கிறார் தோனி

சஞ்சு சாம்சன், கார்த்திக் சர்மாவுக்கு ரூ.32.30 கோடி செலவு செய்த சிஎஸ்கே: இறுதிக் கட்டத்தை நோக்கி பயணிக்கிறார் தோனி
Updated on
2 min read

ஐபிஎல் 2026 சீசனுக்​காக சென்னை சூப்​பர் கிங்ஸ் அணி விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மேன்​களுக்​காக ரூ.32.30 கோடியை செல​விட்​டுள்​ளது. மினி ஏலத்​துக்கு முன்​ன​தாக ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​யில் இருந்து சஞ்சு சாம்​சனை ரூ.18.10 கோடிக்கு டிரேடிங் முறை​யில் சிஎஸ்கே அணி வாங்​கி​யிருந்​தது. இந்​நிலை​யில் நேற்று முன்தினம் நடை​பெற்ற வீரர்​கள் மினி ஏலத்​தில் 19 வயதான விக்கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னான கார்த்​திக் சர்​மாவை பலத்த போட்​டிக்கு இடையே சிஎஸ்கே அணி வாங்​கியது.

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்​றில் சர்​வ​தேச போட்​டி​யில் விளையாடாத வீரரை அதிக தொகைக்கு ஏலம் எடுத்த அணி​யாக சிஎஸ்கே மாறியது. தற்​போது தோனி​யுடன் சேர்த்து சிஎஸ்கே அணி​யில் 4 விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மேன்​கள் உள்​ளன. ஏற்கெனவே தக்​கவைக்​கப்​பட்ட வீரர்​களின் பட்​டியலில் விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னாக உர்​வில் படேலும் உள்​ளார். 2008 முதல் தோனியை மட்​டுமே பிர​தான​மாக நம்பி உள்ள சிஎஸ்கே அணியின் இந்த அணுகு​முறை புதி​தாக பார்க்​கப்​படு​கிறது.

முன்பு எப்போ​தும் இல்​லாத வகை​யில் ஏலத்​தில் விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மேன்​களுக்கு அதிக முக்​கி​யத்​து​வம் கொடுக்கப்பட்டுள்ளதால் தோனி தனது ஐபிஎல் வாழ்க்​கை​யின் இறு​திக்​கட்​டத்தை நோக்கி அடி​யெடுத்து வைக்​கக்​கூடும் என கிரிக்​கெட் வட்​டாரங்​கள் தெரிவிக்​கின்​றன. இதனால் அணியை அடுத்த கட்​டத்​துக்கு கொண்டு செல்​லும் வகை​யில், இளம் வீரர்களை கொண்டு புத்​துணர்ச்​சி​யான அணியை கட்​டமைக்க சிஎஸ்கே அணி நிர்​வாகம் முயன்று வரு​வ​தாக​வும் கூறப்​படு​கிறது.

ஏலத்​தின் போது சிஎஸ்கே அணி​யின் பயிற்​சி​யாள​ரான ஸ்டீபன் பிளெமிங் கூறும்​போது, “தோனி ஏதேனும் ஒரு கட்​டத்​தில் அணியில் இருந்து நகர்ந்து செல்​வார். சஞ்சு சாம்​சன் சர்​வ​தேச தரம் வாய்ந்த வீரர். அவர், தோனி​யின் இடத்தை நிறைவு செய்யக்கூடும். சில நேரங்​களில் கடந்த கால வெற்​றி​யின் காரணமாக நாங்​கள் கோட்​பாடு​கள் மற்​றும் தத்​து​வங்​களை இறுகப்​பற்றி இருந்​தோம். ஆனால் நாங்​கள் மாற வேண்​டும் என்பதை உணர்ந்தோம்” என்​றார்.

சிஎஸ்கே அணி நேற்று முன்​தினம் நடை​பெற்ற வீரர்​கள் ஏலத்தில் கைவசம் வைத்​திருந்த ரூ.43.40 கோடி​யில் 60 சதவீதத்தை சர்வதேச போட்​டிகளில் விளை​யா​டாத வீரர்​களுக்​காக செலவு செய்தது. இதன் மூலம் கடந்த காலங்​களில் ‘டாடி ஆர்​மி’ என அழைக்​கப்​பட்ட சிஎஸ்கே அணி தற்​போது ‘பேபி ஆர்​மி’ ஆக மாற்றம் கண்​டுள்​ளது.

44 வயதான தோனி இது​வரை ஓய்வு குறித்து அதி​காரப்​பூர்​வ​மாக அறிவிக்​க​வில்​லை. எனினும் 2025-ம் ஆண்டு சீசனின் போது அவர், “நான் எனது தொழில் வாழ்க்​கை​யின் கடைசி கட்​டத்​தில் இருக்கிறேன் என்​ப​தில் இருந்து தப்​பிக்க முடி​யாது” என்று கூறியிருந்​தார்.

மேலும் இந்த சீசனில் சிஎஸ்​கே​வின் கடைசிப் போட்​டிக்​குப் பிறகு, “நான் முடித்​து​விட்​டேன் என்று சொல்​ல​வில்​லை, ஆனால் நான் மீண்​டும் அணிக்​குத் திரும்​ப​வும் உறு​தி​யளிக்​க​வில்​லை” எனவும் தோனி குழப்​பத்​துடன் கூறி​யிருந்​தார். சிஎஸ்கே அணிக்​காக கடந்த சீசன்​களில் விளை​யாடிய ராபின் உத்​தப்பா கூறும்​போது, “2026-ம் ஆண்டு எம்​.எஸ். தோனி​யின் கடைசி சீச​னாக இருக்​கும்” என்​றார்.

5 முறை சாம்​பிய​னான சிஎஸ்கே அணி இந்த ஆண்​டு​ கடைசி இடத்​தையே பிடித்து இருந்​தது. அணி​யின் எதிர்​காலத்தை கட்டமைக்​கும் வகை​யிலேயே தற்​போது இளம் வீரர்​கள் அதிகளவில் அணிக்​குள் கொண்​டு​வரப் ​பட்​டுள்​ளனர். அதி​லும் தோனிக்கு பிறகு அதிரடி​யாக விளை​யாடக்​கூடிய விக்​கெட் கீப்​பர்​ பேட்​ஸ்​மேன்​கள்​ மீது அதி​க கவனம்​ குவிக்​கப்​பட்​டுள்​ளது.

சஞ்சு சாம்சன், கார்த்திக் சர்மாவுக்கு ரூ.32.30 கோடி செலவு செய்த சிஎஸ்கே: இறுதிக் கட்டத்தை நோக்கி பயணிக்கிறார் தோனி
ஷுப்​மன் கில் காயத்​தால் அவதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in