ராஜஸ்​தான் அணி​யில் இணைகிறார் தசன் ஷனகா

ராஜஸ்​தான் அணி​யில் இணைகிறார் தசன் ஷனகா
Updated on
1 min read

ஜெய்ப்​பூர்: ராஜஸ்​தான் ராயல்ஸ் ஐபிஎல் அணி​யில் இலங்கை அணி​யின் கேப்​ட​னாக உள்ள தசன் ஷனகா இணை​ய​வுள்​ளார். 2026-ம் ஆண்​டுக்​கான ஐபிஎல் போட்டி வரும் 28-ம் தேதி முதல் நடை​பெறவுள்​ளது. 10 அணி​கள் பங்கேற்​கும் இப்​போட்டி நாட்​டின் பல்​வேறு நகரங்​களில் நடை​பெறவுள்​ளன.

போட்டி தொடங்க இன்​னும் 5 நாட்​களே உள்ள நிலை​யில் அணி வீரர்​கள் தீவிர பயிற்​சி​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். இந்​நிலை​யில் ராஜஸ்​தான் அணி​யில் இலங்கை அணியின் கேப்​டன் தசன் ஷனகா இணை​ய​வுள்​ளார். காயம் காரண​மாக ராஜஸ்​தான் அணி​யில் இடம்பெற்றிருந்த இங்​கிலாந்து வீரர் சாம் கரண் விலகிவிட்டார். இதையடுத்து அவருக்​குப் பதிலாக ராஜஸ்தானில் அணி​யில் தசன் ஷனகா சேர்க்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்​தான் அணி​யில் இணைகிறார் தசன் ஷனகா
8 A.M. Metro: விட்டு விடுதலையாகும் இராவதி | திரை தேவதைகள் 10

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in