துயரங்களை வீழ்த்திய தங்கத் தாரகை ஷர்மிளா தன்கர்!

துயரங்களை வீழ்த்திய தங்கத் தாரகை ஷர்மிளா தன்கர்!
Updated on
1 min read

வாழ்க்கை எறிந்த தடைகளை​யெல்​லாம் தனது அசைக்க முடியாத தன்​னம்​பிக்​கை​யால் சுக்​குநூறாக உடைத்​தெறிந்​து, உலகரங்​கில் இந்​தி​யா​வின் மூவர்​ணக் கொடியை உயரே பறக்​கச் செய்​திருக்​கிறார் ஷர்மிளா தன்கர்.

ஸ்காட்​லாந்​தின் கிளாஸ்கோ நகரில் நடை​பெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டியில், பெண்​களுக்​கான குண்டு எறிதல் பிரி​வில் தங்​கப் பதக்​கம் வென்று புதிய சரித்​திரம் படைத்​துள்​ளார் 40 வயதாகும் ஷர்மிளா தன்கர். ஹரி​யானா மாநிலம் சித்​ரோலி கிராமத்​தைச் சேர்ந்த சர்​மிளா​வின் வாழ்க்கை, பூப்​பாதை அல்ல, முட்​களால் சூழப்​பட்ட போராட்டக்களம். தனது இரண்​டாவது வயதிலேயே போலியோ நோயால் தாக்​கப்​பட்டு இடது காலின் இயங்கு திறனை இழந்​தார்.

சிறு​வய​திலேயே செய்து வைக்​கப்​பட்ட திரு​மணம், கொடுமை​கள் நிறைந்த குடும்ப வாழ்க்கை என விதி அவரை அடுத்​தடுத்​துச் சோதித்​தது. ஆனால், அந்​தத் துயரங்​களி​லிருந்து தனது தாய் மற்றும் குடும்​பத்​தினரின் உறு​துணை​யோடு மீண்​டெழுந்​தார். பின்​னர் ரேவாரியைச் சேர்ந்த தொழில​திபர் அஜித் சிங் என்​பவரை மறுமணம் செய்து புதிய வாழ்க்​கை​யைத் தொடங்​கி​னார்.

இரண்டு குழந்​தைகளுக்​குத் தாயான ஷர்​மிளா​வுக்​குள் மறைந்​திருந்த விளை​யாட்டு ஆர்​வத்தை அடை​யாளம் கண்ட அவரது கணவர் அஜித் சிங், 2020-ல் பயிற்​சி​யாளர் டெக் சந்​தின் வழிகாட்டு​தலின் கீழ் அவரைப் பாரா தடகளப் போட்​டிகளில் களம் இறக்கினார்.

2020-ல் பயிற்​சி​யைத் தொடங்​கிய சர்​மிளா, ஒரே ஆண்​டுக்​குள் தேசிய சாம்​பியன்​ஷிப்​பில் தங்​கம் வென்று அசத்​தி​னார். 2022-ம் ஆண்டு பர்​மிங்​ஹாம் காமன்​வெல்த்​தில் நூலிழை​யில் (4-வது இடம்) பதக்​கத்தை தவற​விட்​ட​வர், இம்​முறை முழு வீச்​சோடு களம் கண்டு தங்​கப் பதக்​கம் வென்று சாதனை படைத்​துள்​ளார்.

துயரங்களை வீழ்த்திய தங்கத் தாரகை ஷர்மிளா தன்கர்!
பாரா குண்டு எறிதலில் தங்கம் வென்று ஷர்மிளா தன்கர் சாதனை; உயரம் தாண்டுதலில் சர்வேஷ் குஷாரேவுக்கு வெள்ளி!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in