

சென்னை: டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதற்காக சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் சிஎஸ்கே- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் சிஎஸ்கே 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஓவர்களை வீசி முடிக்கவில்லை.
இதனால் அணி கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ரூ.12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரின் முதன்முறையாக சிஎஸ்கே அணி பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கே அணி தனது அடுத்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வரும் 14-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது.