

அமராவதி: ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் ஆந்திர மாநிலம், கடப்பாவை சேர்ந்த ஸ்ரீசரணியும் இடம் பெற்றிருந்தார்.
இந்நிலையில் நேற்று அமராவதியில் அமைச்சர் நாரா லோகேஷை நேரில் சந்தித்து ஸ்ரீசரணி வாழ்த்து பெற்றார். அப்போது அவர், ரூ.2.50 கோடிக்கான காசோலையையும், விசாகப்பட்டினத்தில் வீட்டு மனைக்கான பட்டாவையும் வழங்கினார். விரைவில் அவருக்கு அரசு வேலைக்கான நியமன உத்தரவையும் வழங்குவதாக அமைச்சர் லோகேஷ் அறிவித்தார்.