கான்வே முதல் பேர்ஸ்டோ வரை: ஐபிஎல் மினி ஏலத்தில் போனி ஆகாத வீரர்கள்!

கான்வே முதல் பேர்ஸ்டோ வரை: ஐபிஎல் மினி ஏலத்தில் போனி ஆகாத வீரர்கள்!
Updated on
1 min read

சென்னை: எதிர்வரும் 2026-ம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலத்தில் மொத்தம் 359 வீரர்கள் இடம்பெற்றனர். இதில் 77 வீரர்கள் மட்டுமே எடுக்கப்பட வேண்டி இருந்தது. அதன்படி 10 ஐபிஎல் அணிகளும் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப வீரர்களை ஏலத்தில் வாங்கின.

இந்நிலையில், ஏலத்தில் பங்கேற்ற சர்வதேச கிரிக்கெட் நட்சத்திரங்கள் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டில் இதற்கு முன்பு ஆடிய முக்கிய வீரர்களை 10 அணிகளும் வாங்கவில்லை. இதில் சிஎஸ்கே முன்னாள் வீரர் டெவான் கான்வே, ஹைதராபாத், பஞ்சாப், மும்பை உள்ளிட்ட அணிகளில் விளையாடிய ஜானி பேர்ஸ்டோ உள்ளிட்டோரை எந்த அணியும் வாங்கவில்லை.

ஏலத்தில் போனியாகாத வீரர்கள்:

ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் , டெவான் கான்வே, அதர்வா டைடெ, அன்மோல்பிரீத் சிங், அபினவ் மனோகர், யஷ் துல், செதிக்குல்லா அடல், ஜெரால்டு கோட்ஸி, ஸ்பென்சர் ஜான்சன், ஃபசல்ஹக் ஃபரூக்கி, தீக்‌ஷனா, முஜீப் உர் ரஹ்மான், சிமர்ஜித் சிங், ஆகாஷ் மத்வால், கரண் சர்மா, கே.எம்.ஆசிப், முருகன் அஸ்வின், ரிச்சர்ட் கிளீசன், ரைலி மெரிடித், ரிச்சர்ட்சன், வியான் முல்டர், விஜய் ஷங்கர், மஹிபால் லோம்ரோர், மைக்கேல் பிரேஸ்வெல், டேரில் மிட்செல், ஷனகா, சித்தார்த் யாதவ், வில்லியம் சுதர்லாந்து, ரஹ்மானுல்லா குர்பாஸ், ஜேமி ஸ்மித், ஜானி பேர்ஸ்டோ, வன்ஷ் பேடி, ஜேமி ஸ்மித்.

காயம் உள்ளிட்ட காரணத்தால் தற்போது ஒப்பந்தம் ஆகியுள்ள வீரர்களை விலகினால், இவர்களை மாற்று வீரர்களாக அணிகள் பயன்படுத்தக்கூடும். கடந்த சீசனில் பேர்ஸ்டோ மும்பை இந்தியன்ஸ் அணியில் அப்படி ஒப்பந்தம் ஆகியிருந்தார்.

கான்வே முதல் பேர்ஸ்டோ வரை: ஐபிஎல் மினி ஏலத்தில் போனி ஆகாத வீரர்கள்!
கேமரூன் கிரீன் முதல் கார்த்திக் சர்மா வரை: அதிக தொகைக்கு வசமான வீரர்கள் @ ஐபிஎல் மினி ஏலம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in