போட்டிகளுக்கு இடையே இங்கிலாந்து வீரர்​கள் மது அருந்திய​தாக புகார்

போட்டிகளுக்கு இடையே இங்கிலாந்து வீரர்​கள் மது அருந்திய​தாக புகார்
Updated on
1 min read

மெல்​பர்ன்: ஆஸ்​திரேலி​யா​வில் நடை​பெற்று வரும் ஆஷஸ் தொடரை இங்​கிலாந்து 0-3 என்ற கணக்​கில் இழந்​துள்​ளது.

இந்​நிலை​யில் 2-வது மற்​றும் 3-வது டெஸ்ட் போட்​டிகளுக்கு இடையே பிரிஸ்​பேனுக்கு அரு​கிலுள்ள நூஸா நகருக்​குச் சென்ற இங்​கிலாந்து வீரர்​கள் அதிக அளவில் மது அருந்​தி​ய​தாக புகார் எழுந்​துள்​ளது. இதுதொடர்​பாக இங்கிலாந்து அணி​யின் நிர்​வாக இயக்​குநர் ராபர்ட் கீ விசா​ரணை நடத்தி இங்​கிலாந்து கிரிக்​கெட் வாரி​யத்​திடம் அறிக்கை அளிக்​க​வுள்​ளார்.

இதுகுறித்து அவர் கூறும்​போது, “போட்​டிகளுக்கு இடையே ரிலாக்ஸ் ஆகும் வகை​யில் வீரர்​கள் மது அருந்​து​வது சகஜம்​தான். அதே​நேரத்​தில் அதிக அளவில் மது அருந்​து​வது ஏற்​கக்​கூடியதல்ல. அளவுக்கு அதி​க​மாகக் குடிப்​பதை அபத்​த​மானது என்று நான் நினைக்​கிறேன். இதுதொடர்​பாக விரை​வில் வி​சா​ரணை நடத்தி அறிக்கை சமர்ப்​பிக்​கப்​படும்​” என்​றார்​.

போட்டிகளுக்கு இடையே இங்கிலாந்து வீரர்​கள் மது அருந்திய​தாக புகார்
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜன.6-க்குள் நல்ல செய்தியை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்: அமைச்சர் அன்பில் மகேஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in