

ஜோஷ்னா சின்னப்பா, வேலவன் செந்தில்குமார்
சென்னை: ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீரர்கள் ஜோஷ்னா சின்னப்பா, வேலவன் செந்தில்குமார் ஆகியோருக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: ஆசிய விளையாட்டுப்போட் டியில், ஸ்குவாஷ் விளையாட்டின் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ள ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில்குமார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
இவர்களின் சிறப்பான சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழக அரசு சார்பில் தலா ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். இவர்களின் வெற்றி, விளையாட்டில் சாதனை படைக்கத் துடிக்கும் இளம் தலைமுறைக்கு நம்பிக்கையையும், ஊக்கத்தையும் தருகிறது. திறன்மிக்க அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தமிழக அரசு உறுதுணையாக நிற்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.