சென்னை ஸ்குவாஷ் போட்டி: ஜோஷ்னா சின்னப்பா வெற்றி

ஜோஷ்னா சின்னப்பா

ஜோஷ்னா சின்னப்பா

Updated on
1 min read

சென்னை: ஹெச்சிஎல் ஸ்குவாஷ் இந்தியா டூர் 4 போட்டி சென்னையில் உள்ள இந்திய ஸ்குவாஷ் அகாடமியில் நேற்று தொடங்கியது. ரூ.13.40 லட்சம் பரிசுத் தொகை கொண்ட இந்தத் தொடர் வரும் 5ம் தேதி வரை நடைபெறுகிறது.

தொடக்க நாளில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய நட்சத்திரமான ஜோஷ்னா சின்னப்பா 11-3, 11-7, 11-6 என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த அனிகா துபேவை தோற்கடித்தார். ஜோஷ்னா தனது அடுத்த ஆட்டத்தில் நியூஸிலாந்தின் எல்லா ஜேன் லாஷுடன் மோதுகிறார்.

தேசிய சாம்பியன்களான வேலவன் செந்தில் குமார், அனஹத் சிங் ஆகியோருக்கு முதல் சுற்றில் ‘பை’ வழங்கப் பட்டது. இதனால் அவர்கள் நேரடியாக 2-வது சுற்றில் மோத உள்ளனர்.

<div class="paragraphs"><p>ஜோஷ்னா சின்னப்பா</p></div>
“என்னுடைய கிரிக்கெட் முழு​வதும் மனரீதியிலானது” - மனம் திறக்கும் விராட் கோலி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in