என் விதியை யாரும் மாற்ற முடியாது: மனம் திறக்கும் கேப்டன் ஷுப்மன் கில்

என் விதியை யாரும் மாற்ற முடியாது: மனம் திறக்கும் கேப்டன் ஷுப்மன் கில்
Updated on
1 min read

வதோதரா: ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் நடை​பெற உள்​ளது. இந்த தொடருக்​கான இந்​திய அணி​யில் ஷுப்​மன் கில் சேர்க்​கப்​பட​வில்​லை. டெஸ்ட், ஒரு​நாள் போட்​டி​யில் இந்​திய அணி​யின் கேப்​ட​னாக ஷுப்​மன் கில் செயல்​பட்டு வரும் நிலை​யில் டி 20 அணி​யில் அவருக்கு இடம் கொடுக்​கப்​ப​டாதது பல்​வேறு விமர்​சனங்​களுக்கு வழி​வகுத்​தது.

இந்​நிலை​யில் நியூஸிலாந்து அணிக்கு எதி​ரான முதல் ஒரு ​நாள் போட்​டி​யில் இந்​திய அணி இன்று மோத உள்​ளது. இதையொட்டி வதோத​ரா​வில் நேற்று நடை​பெற்ற பத்​திரி​கை​யாளர்​கள் சந்​திப்​பில் ஷுப்​மன் கில் கூறிய​தாவது: என் வாழ்க்​கை​யில், நான் இருக்க வேண்​டிய இடத்​தில் நான் இருக்​கிறேன், என் விதி​யில் என்ன எழுதப்​பட்​டிருந்​தா​லும், யாரும் அவற்றை என்​னிட​மிருந்து பறிக்க முடி​யாது. இது என்​னுடைய நம்​பிக்​கை. டி 20 உலகக் கோப்பைக்​கான இந்​திய அணி​யில் என்​னுடைய பெயர் இடம்பெறவில்லை.

தேர்​வுக்​குழு​வின் முடிவை நான் மதிக்​கிறேன். டி 20 உலகக் கோப்பையை வெல்ல இந்​திய அணிக்கு எனது வாழ்த்​துகளை தெரி​வித்​துக் கொள்​கிறேன். விளை​யாட்டு வீர​ராக இருக்​கும் ஒருவர் எப்​போதும் நிகழ்​காலத்​தில் இருக்க வேண்​டும். போட்​டிகளில் விளை​யாடும்​போதும், என்ன நடக்​கப் போகிறது என அதிகம் சிந்​திக்​காமல் நிகழ்​காலத்​தில் இருக்க வேண்​டும். அப்​படி நிகழ்​காலத்​தில் கவனம் செலுத்​தும்​போது வெற்றி பெறு​வதற்​கான வாய்ப்​பு​கள் அதி​க​மாக இருக்​கும். மேலும், நிகழ்​காலத்​தில் இருப்பது உங்​களது வாழ்க்​கையை எளிமை​யான​தாக​வும், அமைதி​யான​தாக​வும் மாற்​றும்.

அணி​யில் கேப்​ட​னாக இருக்​கும்​போது, காயம் காரண​மாக போட்டிகளில் விளை​யாட முடியத சூழல் ஏற்​பட்​டால், அது ஒரு​போதும் எளிமை​யான விஷய​மாக இருக்​காது. அணி​யில் உள்ள வீரர்​கள் அனை​வரும் விளை​யாடும் ​போது, கேப்​ட​னாக அனைத்துப் போட்​டிகளி​லும் விளை​யாட முடி​யாதது மிக​வும் கடின​மான ஒன்​றாக இருக்​கும். செய்ய வேண்​டிய விஷ​யங்​கள் அதி​கம் இருக்​கும்போது, விளை​யாட முடி​யாமல் வெளியே அமர்ந்திருப்​பது வெறுப்​பாக இருக்​கும்.

2011-ம் ஆண்​டுக்​குப் பிறகு இந்​திய அணி ஒரு​நாள் போட்டி உலகக் கோப்​பையை வெல்​ல​வில்​லை. வெற்றி பெறு​வது எளி​தாக இருந்தால் ஒவ்​வொரு 2 ஆண்​டு​களுக்​கும் ஒரு முறை நாம் கோப்பையை வெல்​லலாம். இதை சொல்​வது எளிது. ஆனால் எந்த வடிவி​லான உலகக் கோப்பை தொடரும் எளி​தானது இல்​லை. பெரிய அளவி​லான ஐசிசி தொடர்​களை வெல்ல வேண்​டு​மா​னால் மீள்​தன்​மை, விடா முயற்​சி, மன உறுதி தேவை.

டெஸ்ட் கிரிக்​கெட் தொடர்​களை பொறுத்​தவரை போட்​டிகளுக்கு தயா​ரா​வதற்கு போதிய நேரம் இல்​லை. இது தொடர்​பாக ஆலோசனை நடத்தி உள்​ளோம். உலகம் முழு​வ​தி​லும் டெஸ்ட் போட்​டிகளில்​ விளை​யாடி வெற்​றி

பெற வேண்​டுமென்​றால்​ அதற்​கு கடின​மாக த​யா​ராக வேண்​டும்​. இதை கருத்​தில்​ கொண்​டு சில நடவடிக்​கைகளை எடுப்​போம்​. இவ்​​வாறு ஷுப்​மன்​ கில்​ கூறி​னார்​.

என் விதியை யாரும் மாற்ற முடியாது: மனம் திறக்கும் கேப்டன் ஷுப்மன் கில்
செங்குந்தர் மகாஜன சங்கத்தின் பெயரில் உள்ள ‘சாதியை’ நீக்கும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in