தனது விவாகரத்து குறித்து மனம் திறந்த மேரி கோம்

மேரி கோம்

மேரி கோம்

Updated on
1 min read

புதுடெல்லி: குத்துச்சண்டையில் ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர் இந்தியாவின் மேரி கோம். கடந்த 2024-ல் அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில், தனது விவாகரத்து குறித்து அவர் முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

“கடந்த 2022-ல் நான் காயமடையும் வரையில் வாழ்வில் அனைத்தும் சுமூகமாக இருந்தது. அதுவரை நான் விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தேன். நிதி விவகாரத்தில் எனது கவனம் அறவே இருந்தது அல்ல. ஆனால், அதன் பின்னர்தான் நான் பொய்யான வாழ்க்கையை வாழ்ந்து வந்தேன் என்பது எனக்கு புரிந்தது.

அப்போது எனது கணவர் மீது நான் கொண்டிருந்த நம்பிக்கையை இழந்தேன். எங்களுக்கு இடையே சுமூக தீர்வு காண பல்வேறு முயற்சிகள் நடந்தன. இருப்பினும் அது பலன் தராத நிலையில் இரு வீட்டாருக்கும் விவரத்தை சொல்லி விவாகரத்து பெற்றோம். நான் அனுபவித்த கஷ்டங்களை அறியாதவர்கள் பலரும் என்னை பேராசை கொண்டவள் என சொல்கின்றனர். கோடிக்கணக்கான பணம் மற்றும் சொத்துகளை இழந்தேன். எனது சாதனைகளால் என்ன பயன்?

என் குழந்தைகளுக்கான கடுமையாக உழைக்கிறேன். நான் கடந்து வந்த கடினம் என்ன என்பது கடவுளுக்கே தெரியும். அது என் வாழ்வின் இருண்ட காலம். இருந்தாலும் தொடர்ந்து என் வாழ்வில் நான் தொடர்ந்து போராடுவேன். என் வாழ்க்கை ஒரு நீண்ட குத்துச்சண்டை போட்டி போல இருக்கிறது என்று தோன்றுகிறது” என மேரி கோம் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>மேரி கோம்</p></div>
Realme 16 Pro ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in