இலங்கை டெஸ்ட் தொடர்: ஷுப்மன் கில் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ஷுப்மன் கில்

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ஷுப்மன் கில்

Updated on
1 min read

மும்பை: இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி ஷுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அடுத்த மாதம் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஆக.15 அன்று காலே மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆக.23 அன்று கொழும்பிலும் நடைபெறுகிறது. அதற்கு முன்பாக இந்திய அணி பயிற்சி ஆட்டத்திலும் விளையாடுகிறது.

இந்நிலையில், இந்த தொடருக்கான அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

இந்திய அணி விவரம்

ஷுப்மன் கில் (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்ஷன், துருவ் ஜூரேல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதர், பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்நூர் பிரார். தேவ்தத் படிக்கல், சரண்ஷ் ஜெயின்.

அணியில் அறிவிக்கப்பட்டுள்ள சாய் சுதர்ஷன் மற்றும் பும்ரா ஆகியோர் தங்களது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டி உள்ளது. அவர்கள் 100 சதவீத மேட்ச் ஃபிட்னஸை பெற்றால் மட்டுமே இந்த தொடரில் விளையாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக நிதிஷ் ரெட்டி மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் இந்த தொடரில் விளையாடவில்லை.

<div class="paragraphs"><p>இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ஷுப்மன் கில்</p></div>
இ20 பெட்ரோலுக்கு எதிராக ஆக.4-ல் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த திட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in