பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது வங்கதேசம்

பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது வங்கதேசம்
Updated on
1 min read

மிர்பூர்: வங்கதேசம் - பாகிஸ்​தான் அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி மிர்​பூர் நகரில் நடை​பெற்று வந்​தது. இதன் முதல் இன்​னிங்​ஸில் வங்​கதேசம் 413 ரன்​களும், பாகிஸ்தான் 386 ரன்​களும் எடுத்​தன. 27 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய வங்​கதேச அணி நேற்​றைய கடைசி நாள் ஆட்​டத்​தில் 70.3 ஓவர்​களில் 9 விக்​கெட்​கள் இழப்புக்கு 240 ரன்​கள் எடுத்த நிலை​யில் டிக்​ளேர் செய்​தது.

அதி​கபட்​ச​மாக கேப்​டன் நஜ்​முல் ஹோசைன் ஷான்டோ 87, மொமினுல் ஹக் 56 ரன்​கள் சேர்த்​தனர். இதையடுத்து 268 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த பாகிஸ்​தான் அணி 52.5 ஓவர்​களில் 163 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக அப்​துல்லா பாஸல் 66, சல்​மான் ஆகா 26, சவுத் ஷகீல் 15, முகமது ரிஸ்​வான் 15, அஸான் அவைஸ் 15 ரன்​கள் சேர்த்​தனர்.

வங்​கதேச அணி தரப்​பில் வேகப்​பந்து வீச்​சாள​ரான நஹித் ராணா 5 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். தஸ்​கின் அகமது, தைஜுல் இஸ்​லாம் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். 104 ரன்கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற வங்​கதேச அணி 2 ஆட்​டங்​கள் கொண்ட டெஸ்ட் கிரிக்​கெட் தொடரில் 1-0 என முன்​னிலை வகிக்கிறது. 2-வது மற்​றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 16-ம் தேதி சைல்​ஹெட் நகரில் தொடங்​கு​கிறது.

பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது வங்கதேசம்
நீட் தேர்வு ரத்தும் தாக்கமும்: பரிதவிக்கும் மாணவர்களுக்கு தீர்வுதான் என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in