ஆசிய விளையாட்டு: வங்கதேச கிரிக்கெட் அணி அறிவிப்பு

ஆசிய விளையாட்டு: வங்கதேச கிரிக்கெட் அணி அறிவிப்பு
Updated on
1 min read

டாக்கா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கவுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2026-ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டி ஜப்பானின் நகோயா நகரில் செப்டம்பர் 19-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் வங்கதேச கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச அணியின் முன்னணி பேட்ஸ்மேனான நஜ்முல் ஹொசைன் ஷான்டோ ஒரு ஆண்டுக்கும் மேலான இடைவெளிக்குப் பின்னர் அணிக்குத் திரும்பியுள்ளார். லிட்டன் தாஸ் அணியின் கேப்டனாகவும், தவ்ஹித் ஹிரிடோய் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அணி விவரம்: லிட்டன் தாஸ்(கேப்டன்), தன்சித் ஹசன், பர்வேஸ் ஹொசைன், சயீப் ஹாசன், நஜ்முல் ஹொசைன், தவ்ஹித் ஹிரிடோய், மொசாடெக் ஹொசைன், யாசிர் அலி சவுத்ரி, நஸ்ஹெத் ஹொசி, ரிஷா முகமது சைபுதீன், ஷோரிபுல் இஸ்லாம், முஸ்தாபிஸுர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத்.

ஆசிய விளையாட்டு: வங்கதேச கிரிக்கெட் அணி அறிவிப்பு
நிர்வாக செலவுகள் முழுவதையும் அரசே ஏற்க வேண்டும்: டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in