முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தியது வங்கதேசம்

முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தியது வங்கதேசம்
Updated on
1 min read

சட்டோகிராம்: நியூஸிலாந்​துக்கு எதி​ரான முதல் டி20 கிரிக்கெட் போட்​டி​யில் வங்கதேச அணி 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது.

சட்​டோகி​ராமில் நேற்று நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 182 ரன்​கள் குவித்​தது. அதிகபட்சமாக டேன் கிளீவர் 28 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 7 பவுண்​டரி​களு​டன் 51 ரன்​களும், கேட்னி கிளார்க் 37 பந்துகளில், ஒரு சிக்​ஸர், 7 பவுண்​டரி​களு​டன் 51 ரன்​களும் சேர்த்​தனர். கேப்​டன் நிக் கெல்லி 39, ஜோஷ் கிளார்க்​சன் 27 ரன்​கள் எடுத்​தனர்.

வங்​கதேச அணி சார்​பில் ரிஷாத் ஹோசைன் 2 விக்கெட்கள் கைப்​பற்​றி​னார். 183 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த வங்​கதேச அணி 18 ஓவர்​களில் 4 விக்​கெட்​களை இழந்து 183 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. தவுஹித் ஹிர்தோய் 27 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 2 பவுண்டரிகளுடன் 51 ரன்​களும், ஷாமின் ஹோசைன் 13 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 31 ரன்​களும் விளாசினர்.

பர்​வேஷ் ஹோசைன் 28, கேப்​டன் லிட்​டன் தாஸ் 21, தன்ஸித் ஹசன் 20, சைஃப் ஹசன் 17 ரன்​கள் சேர்த்​தனர். ஆட்ட நாயக​னாக தவுஹித் ஹிர்​தோய் தேர்​வா​னார். 6 விக்கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற வங்​கதேச அணி 3 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்​கிறது. 2-வது ஆட்​டம் நாளை (29-ம் தேதி) நடை​பெறுகிறது.

முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தியது வங்கதேசம்
Bulbbul: பலீவனப்படுத்தும் சமூகத்தைப் பந்தாடும் புல்புல் | திரை தேவதைகள் 15

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in