ஆஸ்திரேலிய ஓபன்: 2-வது சுற்றில் ஜன்னிக் சின்னர், மேடிசன் கீஸ்

ஆஸ்திரேலிய ஓபன்: 2-வது சுற்றில் ஜன்னிக் சின்னர், மேடிசன் கீஸ்

Published on

மெல்பர்ன்: ஆஸ்​திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 3-வது நாளான நேற்று ஆடவர் ஒற்​றையர் பிரிவு முதல் சுற்றில் நடப்பு சாம்​பியனு​மான 2-ம் நிலை வீர​ரான இத்தாலி​யின் ஜன்​னிக் சின்​னர், 93-ம் நிலை வீர​ரான பிரான்​ஸின் ஹ்யூகோ கஸ்​ட​னுடன் மோதி​னார். இதில் ஜன்​னிக் சின்​னர் 6-2, 6-1 என்றசெட் கணக்​கில் முன்னிலையில் இருந்தபோது காயம் காரண​மாக ஹ்யூகோ கஸ்​டன் வில​கி​னார். இதனால் ஜன்​னிக் சின்​னர் 2-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

5-ம் நிலை வீர​ரான இத்​தாலி​யின் லாரேன்ஸோ முசெட்​டி, பெல்​ஜி​யத்​தின் ரஃபேல் கோலிக்​னானுடன் மோதி​னார். இதில் லாரேன்ஸோ முசெட்டி 4-6, 7-6 (7-3), 7-5, 3-2 என்ற செட் கணக்​கில் முன்​னிலை​யில் இருந்த போது ரஃபேல் கோலிக்​னான் காயம் காரண​மாக வில​கி​னார். இதனால் லாரேன்ஸோ முசெட்டி 2-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

8-ம் நிலை வீர​ரான அமெரிக்​கா​வின் பென் ஷெல்​டன் 6-3, 7-6 (7-2), 7-6 (7-5) என்ற செட் கணக்​கில் பிரான்​ஸின் உகோ ஹம்​பர்ட்​டை​யும், 9-ம் நிலை வீர​ரான அமெரிக்​கா​வின் டெய்​லர் ஃபிரிட்ஸ் 7-6 (7-5), 5-7, 6-1, 6-3 என்ற செட் கணக்​கில் பிரான்​ஸின் வாலண்​டைன் ராயரை​யும் வீழ்த்தி 2-வது சுற்றில் நுழைந்​தனர். பிரான்​ஸின் கேல் மோன்​பில்ஸ் 7-6 (7-3), 5-7, 4-6, 5-7 என்ற செட் கணக்​கில் ஆஸ்​திரேலி​யா​வின் டேன் ஸ்வீனி​யிட​மும், பல்​கேரி​யா​

வின் கிரி​கோர் டிமிட்​ரோவ் 4-6, 4-6, 3-6 என்ற சட் கணக்​கில் செக்​குடியரசின் தாமஸ் மச்​சாக்​கிட​மும் தோல்வி அடைந்தனர். 15-ம் நிலை வீர​ரான ரஷ்​யா​வின் கரேன் கச்சனோவ் 4-6, 6-4, 6-3, 5-7, 6-3 என்ற செட் கணக்​கில் அமெரிக்​கா​வின் அலெக்ஸ் மைக்​கேல்​சென்​னை​யும், 16-ம் நிலை வீர​ரான செக்​குடியரசின் ஜக்​குப் மென்​சிக் 7-5, 4-6, 2-6, 7-6 (7-1), 6-3 என்ற செட் கணக்​கில் ஸ்பெ​யினின் பாப்லோகர்​ரேனோ பஸ்​டாவை​யும் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்​னேறினர்.

மகளிர் ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றில் நடப்பு சாம்பியனும் 9-ம் நிலை வீராங்​க​னை​யு​மான அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 7-6 (8-6), 6-1 என்ற செட் கணக்​கில் உக்ரைனின் ஒலெக்​ஸாண்ட்ரா ஒலினிகோ​வாவை​யும், 5-ம் நிலை வீராங்​க​னை​யான கஜகஸ்​தானின் எலெனா ரைபகினா 6-4, 6-3 என்ற செட் கணக்​கில் ஸ்லோவேனி​யா​வின் கஜா ஜூவானை​யும், 10-ம் வீராங்கனை​யான சுவிட்​சர்​லாந்​தின் பெலின்டா பென்​சிக் 6-0, 7-5 என்ற செட் கணக்​கில் கிரேட் பிரிட்​டனின் கேட்டி போல்​டரை​யும் வீழ்த்தி 2-வது சுற்​றில் கால்​ப​தித்​தனர்.

18-ம் நிலை வீராங்​க​னை​யான ரஷ்​யா​வின் லியுட்​மிலா சாம்​சோனோவா 6-0, 5-7, 4-6 என்ற செட் கணக்​கில் ஜெர்மனி​யின் லாரா சீக்​மண்ட்​டிடம் தோல்வி அடைந்​தார். இதே​போன்று 22-ம் நிலை வீராங்​க​னை​யான கனடா​வின் லெய்லா பெர்​னாண்​டஸ் 2-6, 6-7 (1-7) என்ற செட் கணக்​கில் இந்​தோ​னேஷி​யா​வின் ஜானிஸ் டிஜெனிடம் வீழ்ந்​தார். 24-ம் நிலை வீராங்​க​னை​யான லாத்​வி​யா​வின் ஜெலினா ஓஸ்டாபென்கோ 6-4, 6-4 என்ற செட் கணக்​கில் சுலோவேக்​கி​யா​வின் ரெபேக்கா ஸ்ரம்​கோ​வாவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்​னேறி​னார். 16-ம் நிலை வீராங்​க​னை​யான ஜப்​பானின் நவோமி ஒசாகா 6-3, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் குரோஷியா​வின் அன்​டோனியா ருஸிக்கை வீழ்த்​தி​னார்.

இந்​திய ஜோடி தோல்வி

ஆடவர் இரட்​டையர் பிரிவு முதல் சுற்​றில் இந்​தி​யாவின் நிகிபூனாச்​சா, தாய்​லாந்​தின் புருச்யா இசாரோ ஜோடி ஸ்பெ​யினின் பெட்ரோ மார்​டினெஸ், ஜவும் மு​னார் ஜோடி​யுடன் மோதி​யது. ஒரு மணி நேரம் 51 நிமிடங்​கள் நடைபெற்ற இந்த ஆட்த்​தில் நிகி பூனாச்சா ஜோடி 6-7(3-7) 5-7 என்​ற நேர்​ செட்​ கணக்​கில்​ தோல்​விஅடைந்​தது.

ஆஸ்திரேலிய ஓபன்: 2-வது சுற்றில் ஜன்னிக் சின்னர், மேடிசன் கீஸ்
கூட்டணிக் கட்சிகளில் நம்மை பிடிக்காத சிலர் குழப்பம் விளைவிக்க நினைக்கலாம்: முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in