ஆஸ்​திரேலிய ஓபன் டென்னிஸ்: கால் இறு​தி​ச் சுற்றுக்கு அல்​க​ராஸ், சபலென்கா தகுதி

ஆஸ்​திரேலிய ஓபன் டென்னிஸ்: கால் இறு​தி​ச் சுற்றுக்கு அல்​க​ராஸ், சபலென்கா தகுதி
Updated on
2 min read

மெல்​பர்ன்: ஆஸ்​திரேலிய ஓபன் கிராண்ட்​ஸ்​லாம் டென்​னிஸ் போட்​டி​யின் கால் இறு​திச் சுற்​றுக்கு ஸ்பெ​யின் வீரர் கார்​லோஸ் அல்​க​ராஸ், பெலாரஸ் வீராங்​கனை அரினா சபலென்கா ஆகியோர் முன்​னேறி​யுள்​ளனர்.

ஆண்​டின் முதல் கிராண்ட்​ஸ்​லாம் போட்​டி​யான ஆஸ்​திரேலிய ஓபன் மெல்​பர்ன் நகரில் நடை​பெற்று வரு​கிறது. நேற்று நடை​பெற்ற ஆடவர் ஒற்​றையர் 4-வது சுற்​றுப் போட்​டி​யில் முதல் நிலை வீர​ரான கார்​லோஸ் அல்​க​ராஸும், அமெரிக்​கா​வின் முன்​னணி வீர​ரான டாமி பாலும் மோதினர்.

இதில் மிகச்​சிறப்​பாக விளை​யாடிய அல்​க​ராஸ் 7-6 (8/6), 6-4, 7-5 என்ற கணக்கில் டாமி பாலை வீழ்த்தி கால் இறு​திச் சுற்​றுக்கு முன்​னேறி​னார். முதல் செட்​டில், அல்​க​ராஸுக்கு சவால் விடுக்​கும் வகை​யில் புள்​ளி​களை டாமி பால் குவித்​த​போ​தி​லும் செட்டை இழந்​தார். இதைத் தொடர்ந்து 2, 3-வது செட்​களி​லும் அல்​க​ராஸ் ஆதிக்​கம் செலுத்தி வெற்றி கண்​டார்.

மற்​றொரு 4-வது சுற்று ஆட்​டத்​தில் ஆஸ்​திரேலி​யா​வைச் சேர்ந்​தவரும், போட்​டித் தரவரிசை​யில் 5-ம் நிலை வீரரு​மான அலெக்ஸ் டி மினாரும், போட்டி தரவரிசை​யில் 10-ம் நிலை வீரர் கஜகஸ்​தானின் அலெக்​ஸாண்​டர் பப்​ளிக்​கும் மோதினர். இதில் அலெக்ஸ் டி மினார் 6-4, 6-1, 6-1 என்ற நேர் செட்​களில் மிக எளி​தாக வெற்றி கண்​டார். இதன்​மூலம் அலெக்ஸ் டி மினார் கால் இறு​திக்​குத் தகுதி பெற்​றார்.

மற்​றொரு 4-வது சுற்று ஆட்​டத்​தில் ஜெர்​மனி வீரரும், 3-ம் நிலை​யில் இருப்​பவரு​மான அலெக்​ஸாண்​டர் ஜிவரேவ் 6-2, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்​கில் அர்​ஜென்​டினா வீரரும், போட்​டி​யின் 18-ம் நிலை வீரரு​மான பிரான்​சிஸ்கோ செருன்​டோலாவை தோற்​கடித்து கால் இறு​திச் சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

அமெரிக்க வீரரும், 25-ம் நிலை வீரரு​மான லேர்​னர் டியனும், ரஷ்ய வீரரும், போட்​டித் தரவரிசை​யில் 11-ம் நிலை வீரரு​மான டேனியல் மேத்​வ​தே​வும் மோதிய ஆட்​டத்​தில் லேர்​னர் டியன் வெற்றி பெற்று கால் இறு​திச் சுற்​றுக்கு முன்​னேறி​னார். டியன் 6-4, 6-0, 6-3 என்ற செட் கணக்​கில் மேத்​வ​தேவை அதிர்ச்​சித் தோல்​வி​யுறச் செய்​தார்.

ஜோகோவிச் முன்னேற்றம்: ஆடவர் ஒற்றையர் 4-வது சுற்றில் செர்பிய வீரர் ஜோகோவிச்சும், செக் குடியரசு வீரர் ஜாகுப் மென்சிக்கும் மோத இருந்தனர். காயம் காரணமாக 4-வது சுற்றிலிருந்து ஜாகுப் விலகியதையடுத்து கால் இறுதிச் சுற்றுக்கு ஜோகோவிச் முன்னேறினார்.

மகளிர் ஒற்​றையர் பிரிவு 4-வது சுற்​றுப் போட்​டி​யில் முதல் நிலை வீராங்​க​னை​யான அரினா சபலென்கா 6-1, 7-6 (7/1) என்ற செட் கணக்​கில் கனடா​வின் விக்​டோரியா போக்​கோவைச் சாய்த்​தார். மற்​றொரு 4-வது சுற்று ஆட்​டத்​தில் அமெரிக்க வீராங்​கனை இவா ஜோவிக் அபார​மாக விளை​யாடி 6-0, 6-1 என்ற கணக்​கில் கஜகஸ்​தான் வீராங்​கனை யுலியா புடின்ட்​சே​வாவை வீழ்த்​தி​னார்.

போட்​டித் தரவரிசை​யில் 3-ம் நிலை​யில் இருப்​பவரும், அமெரிக்​காவைச் சேர்ந்​தவரு​மான கோகோ காஃப் 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்​கில் செக் குடியரசின் கரோலினா முச்​சோ​வாவை தோற்​கடித்​தார்.

ஆஸ்​திரேலிய ஓபன் டென்னிஸ்: கால் இறு​தி​ச் சுற்றுக்கு அல்​க​ராஸ், சபலென்கா தகுதி
தங்கம் விலை புதிய உச்சம்: ஒரு கிராம் ரூ.15,000+, ஒரு பவுன் ரூ.1.20 லட்சம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in