

மெல்பர்ன்: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரின் முதல் போட்டி மெல்பர்ன் நகரில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 9 விக்கெட்கள் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக கேப்டன் ஹாரி புரூக் 28 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் விளாசினார். டாம் பேன்டன் 39, ஜோர்டான் காக்ஸ் 27 ரன்கள் சேர்த்தனர்.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜேக் எட்வர்ட்ஸ், நிகில் சவுத்ரி ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 188 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
நிகில் சவுத்ரி 38 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் விளாசினார். கேப்டன் மிட்செல் மார்ஷ் 37, சாம் ஹார்ப்பர் 32, ஜேக் எட்வர்ட்ஸ் 25, டிம் டேவிட் 20 ரன்கள் சேர்த்தனர்.
சேம் கரண் வீசிய கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவையாக இருந்தது. முதல் பந்தை, வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஜேக் எட்வர்ட்ஸ் சிக்ஸருக்கு விளாசி மிரட்டினார். அடுத்த பந்தில் 2 ரன்களும், 4-வது பந்தில் 2 ரன்களும் சேர்த்த ஜேக் எட்வர்ட்ஸ் 5-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி ஆஸ்திரேலிய அணியை வெற்றிக் கோட்டை கடக்க வைத்தார்.
3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் வரும் 24-ம் தேதி குயின்ஸ்லாந்தில் நடைபெறுகிறது.