

வலென்சியா: சாம்பியன்ஸ் ஆஃப் தி ஃபியூச்சர் அகாடமி சார்பில் கார்ட்டிங் பந்தய தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஸ்பெயினின் வலென்சியா நகரில் நடைபெற்ற முதல் தொடரில் இந்தியாவை சேர்ந்த 11 வயதான வீராங்கனையான அதிகா மிர் 3-வது இடம் பிடித்து அசத்தினார்.
இதன் வாயிலாக போட்டி நிறைந்த இந்தத் தொடரில் பதக்க மேடை ஏறிய முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார் அதிகா மிர். 15 சுற்றுகளை அதிகா மிர் 56.658 விநாடிகளில் எட்டினார். ஆனால் பந்தயத்தின் போது மற்றொரு வீராங்கனையுடன் மோதியதால் அதிகா மிர்ருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர், 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.