“பதக்கம், சாதனைகள் முக்கியம் கிடையாது; 53 விநாடிகளில் இலக்கை எட்ட வேண்டும்” - வித்யா ராம்ராஜ் நேர்காணல்

வித்யா ராம்ராஜ்

வித்யா ராம்ராஜ்

Updated on: 
3 min read

ஜப்​பானில் முடிவடைந்த ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் தடகளத்​தில் தமிழகத்​தின் கோவை மாவட்​டம் மீனாட்​சிபுரத்தை சேர்ந்த வித்யா ராம்​ராஜ் 4X400 மீட்​டர் தொடர் ஓட்​டத்​தில் தங்​கப் பதக்​க​மும், 4X400 மீட்​டர் கலப்பு தொடர் ஓட்​டத்​தில் வெள்​ளிப் பதக்க​மும், 400 மீட்​டர் தடை தாண்​டும் ஓட்​டத்​தில் வெண்​கலப் பதக்​கமும் வென்று சாதனை படைத்​தார். இதில் 400 மீட்​டர் தடை தாண்​டும் ஓட்​டத்​தில் இலக்கை 54.75 விநாடிகளில் கடந்து பி.டி.உஷா​வின் 42 வருட தேசிய சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்து இந்​தி​யா​வின் தங்க மங்​கை​யாக உரு​வெடுத்​துள்​ளார்.

தனது சாதனை​களால் வரும் 2027-ம் ஆண்டு செப்​டம்​பர் மாதம் சீனா​வில் நடை​பெற உள்ள உலக சாம்​பியன்​ஷிப் தடகள போட்​டி​யில் முதன்​முறை​யாக அறி​முக​மாக உள்​ளார். இந்த போட்​டி​யில் உலகத் தரவரிசை​யில் 48 இடங்​களுக்​குள் உள்ள வீராங்​க​னை​கள் மட்​டுமே கலந்து கொள்ள முடி​யும். இந்த வகை​யில் வித்யா ராம்​ராஜ் தற்​போது 35-வது இடத்​தில் உள்​ளார். கடந்த 5 ஆண்​டு​களாக நாட்​டுக்​கும் நமது மாநிலத்​துக்​கும் பெருமை சேர்த்து வரும் 28 வயதான வித்யா ராம்​ராஜுடன் நடத்​திய உரை​யாடலில் இருந்​து….

Q

2023-ம் ஆண்டு வென்​றுள்ள ஆசிய விளை​யாட்டு பதக்​கத்​துக்​கும், 2026-ம் ஆண்டு வென்​றுள்ள ஆசிய விளை​யாட்டு பதக்​கத்​துக்​கும் என்ன வித்​தி​யாசம்?

A

கடந்த 2023-ம் ஆண்​டும் நான் 3 பதக்​கங்​களை வென்​றிருந்​தேன். ஆனால் இப்​போது வென்ற 3 பதக்​கங்​களை மட்​டும் இந்த அளவுக்கு ஏன்? கொண்​டாடு​கிறார்​கள் என்​பது தெரிய​வில்​லை.

Q

ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் தங்​கப் பதக்கம் வெல்ல உத்​வேகம் அளித்த தருணம் எது?

A

ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் மகளிருக்​கான தொடர் ஓட்​டத்​தில் நாங்​கள் மைதானத்​துக்கு உள்ளே நுழை​யும் போது அனுபவம் வாய்ந்த 36 வயதான பூவம்மா எனக்கு உத்​வேகம் அளித்​தார். அப்​போது அவர் என்​னிடம் கூறும்​போது, தடகளத்​தில் நாம்​தான் நாட்​டுக்​காக தங்​கப் பதக்​கம் வென்று கொடுக்க வேண்​டும்.

பதக்க மேடை​யில் நமது தேசிய கீதத்தை கேட்​டு​விட்​டு​தான் நாம் வெளியே செல்ல வேண்​டும். நாங்​கள் 3 பேரும் விரை​வாக முடிந்​தவரை முயற்சி செய்து முன்​னிலை பெற்​றுக் கொடுக்​கிறோம். அதை பயன்​படுத்தி உன்​னால் முன்​னேறி சென்று பதக்​கம் வென்று கொடுக்க முடி​யும் என நாங்​கள் நம்​பு​கிறோம். உன்​னால் வெற்​றிகர​மாக நிறைவு செய்ய முடி​யும் என நம்​பிக்கை கொடுத்​தார்.

Q

ஆசிய விளை​யாட்டு போட்​டிக்​கான பயிற்சி எப்​போது, எங்கு தொடங்​குனீர்​கள்?

A

கடந்த நவம்​பர் மாதம் முதல் பயிற்​சியை தொடங்​கினோம். தொடர்ந்து இந்​திய தடகள சங்​கம் சார்​பில் இந்த முறை 3 மாதம் போலந்​தில் பயிற்சி எடுத்​தோம். அதன் பின்​னர் ஆசிய விளை​யாட்டு போட்டி தொடங்​கு​வதற்கு 10 நாட்​களுக்கு முன்​னர் ஜப்​பான் சென்று அங்​கும் பயிற்​சிகளை மேற்​கொண்​டோம்.

Q

ஜப்​பான் ஆசிய விளை​யாட்​டில் தங்​குமிடம், உணவு உள்​ளிட்ட அடிப்​படை வசதி​கள் சரி​யில்​லாமல் இருந்​த​தாக கூறப்​பட்​டதே, இந்த விஷ​யங்​கள் ஏதேனும் மனதள​வில் பாதிப்பை ஏற்​படுத்​தி​ய​தா?

A

நிச்​சய​மாக இல்​லை, ஏனெனில் நான் ஷூக்​கள் இல்​லாமல் கூட வெறும் கால்​களில் ஓடி உள்​ளேன். 25 பேர் தங்​கி​யிருந்த அறை​யில் தங்​கியபடி பயறிற்​சிகள் எடுத்​துள்​ளேன். நானே சமையல் செய்து சாப்​பிட்டு உள்​ளேன். வாடகை அறை​யில் தங்​கி​யிருக்​கிறேன். போட்​டிகளுக்​காக ரயி​லில் பயணம் செய்​யும் போது கழி​வறை அருகே உள்ள இருக்​கை​களில் அமர்ந்து பயணித்​துள்​ளேன்.

சர்​வ​தேச போட்​டிகளில் பங்​கேற்க செல்​கிறோம். நமது இலக்கு போட்​டி​யில் பங்​கேற்​பதும் வெற்றி பெறு​வதும் மட்​டுமே. தங்​கு​வதற்கு இடமும், உணவும் கிடைத்​தால் போதும், மற்​றவை குறித்து கவலைப்​படக்​கூ​டாது என எனது பயிற்​சி​யாளர் கூறு​வார். அதை கடைப்பிடிக்​கிறேன். பதக்​கத்​துக்​காக ஓடக்​கூ​டாது, சாதனைக்​காக ஓடக்​கூ​டாது. நேரத்​துக்​காக ஓட வேண்​டும் எனவும் அவர், கூறி​யுள்​ளார். இதை மேம்​படுத்​து​வ​திலேயே கடந்த 3 வருடங்​களாக பணி​யாற்​றினோம்.

Q

இந்த சீசனில் புவனேஷ்வரில் நடை​பெற்ற ஆசிய விளை​யாட்​டில் 56.07 விநாடிகளில் இலக்கை எட்டி இருந்​தீர்​கள். அங்​கிருந்து 1.32 விநாடிகளை எப்​படி குறைக்க முடிந்​தது?

A

மாநிலங்​களுக்கு இடையி​லான போட்​டி​யிலேயே சாதனையை முறியடிக்க முடி​யும். ஆனால் எனக்கு சவால் அளிக்​ககூடிய வீராங்​க​னை​கள் இங்கு இல்​லை. கடந்த 5 வருடங்​களாக நான் மட்​டுமே தேசிய அளவி​லான போட்​டிகளில் முதலிடம் வந்து கொண்​டிருக்​கிறேன். ஏனெனில் சவால்​தரக்​கூடிய அளவில் நம்​மிடம் வீராங்​க​னை​கள் இல்​லை.

கடுமை​யான போட்டி இருந்​தால் தான் திறன் மேம்​படும். அப்​போதும் நேரத்தை குறைக்க முடி​யும். ஆசிய போட்​டி​யில் வலு​வான போட்​டி​யாளர்​கள் இருந்​த​தால் இம்​முறை நேரத்தை குறைக்க முடிந்​தது.

Q

2023-ல் பி.டி.உஷா சாதனையை சமன் செய்த நீங்​கள் தற்​போது அந்த சாதனையை முறியடித்​துள்​ளீர்​கள், அடுத்த இலக்கு என்ன?

A

எனது பயிற்​சி​யாளரிடம் இப்​போது மகிழ்ச்​சியா என கேட்​டேன். அதற்கு அவர், இல்லை என்​றார். 53 விநாடிகளில் இலக்கை அடை​வாய் என எதிர்​பார்த்​தேன். அதை அடையக்​கூடிய திறன் உன்​னிடம் இருக்​கிறது எனக்​கூறி​னார். இந்த சீசனிலேயே 53 விநாடிகளில் என்​னால் இலக்கை அடைந்​திருக்க முடி​யும். ஆனால் அதை என்​னால் செய்ய முடி​யாமல் போனது.

அடுத்த சீசனில் அந்த இலக்கை அடைய முயற்சி செய்​வோம். அடுத்த ஆண்டு உலக சாம்​பியன்​ஷிப் போட்டி நடை​பெற உள்​ளது. அங்கு ஏற்​கெனவே 52 விநாடிகள் சாதனை இருக்​கிறது. ஒலிம்​பிக்​கில் இறு​திப் போட்​டிக்​குள் நுழைய வேண்​டு​மா​னால் 51 விநாடிகளில் இலக்கை அடைய வேண்​டும்.

இதனால் 54 விநாடிகள் என்​பது போதாது. வெறும் பதக்​கம், சாதனை என்று பார்க்​காமல் உலக அளவுக்கு செல்ல வேண்​டு​மா​னால் இலக்கை 52 அல்​லது 53 விநாடிகளில் எட்ட வேண்​டும். இதனால் அதற்கு தகுந்​த​படி அடுத்த சீசனில் தயா​ரா​வோம்.

Q

உலக சாம்​பியன்​ஷிப்​பில் அறி​முக​மாக உள்​ளீர்​கள், அதற்​கான திட்​டம் என்ன?

A

வெளி​நாடு​களுக்கு சென்று பல்​வேறு சர்​வ​தேச போட்​டிகளில் விளை​யாடும் போது​தான் குறைந்த நேரத்தை அடைய முடி​யும். ஏனெனில் அங்​கு​தான் சவால்​தரக்​கூடிய வீராங்​க​னை​கள் இருப்​பார்​கள்.

Q

நமது நாட்​டில் பயிற்சி பெறு​வதற்​கும், வெளி​நாட்​டில் பயிற்சி பெறு​வதற்​கும் என்ன வித்​தி​யாசங்​கள் உள்​ளன?

A

போலந்​தில் 3 மாதங்​கள் பயிற்சி எடுத்​தேன். அங்கு ஆரோக்​கிய​மான உணவு வழங்​கப்​படு​கிறது. உணவில் எந்​த​வித மசாலாக்​களும் சேர்க்​கப்​படு​வ​தில்​லை. பெரும்​பாலும் ஆவி​யில் வேக​வைத்த உணவு​களே கொடுக்​கிறார்​கள். மேலும் அங்கு நில​வும் வானிலை அற்​புத​மானது. நம்​நாட்​டில் வெளி​யிலுக்​காக பயந்து அதி​காலை 5 மணிக்கே பயிற்​சிக்கு கிளம்​பி​விடு​வோம்.

ஆனால் போலந்து போன்ற நாடு​களில் 10 மணிக்கு மைதானத்​துக்கு சென்​றால் போதும். அங்கு பயிற்சி எடுத்த 3 மாதங்​களும் நான் தின​மும் 10 மணி நேரம் தூங்​கினேன். இது​தான் எனது சிறந்த செயல் திறனை வெளிப்​படுத்​து​வ​தில் முக்​கிய பங்கு வகித்​தது. நல்ல உறக்​கம் இருந்​தால் அது மனதை​யும், மூளை திறனை​யும் சிறப்​பாக வைத்​திருக்​கும். மைதானத்​தில் உயர்​மட்ட செயல் திறனை வெளிப்​படுத்​து​வ​தில் இது 90 சதவீத பங்கு வகிக்​கும்.

Q

மற்ற நாட்டு வீராங்​க​னை​களு​டன் ஒப்​பிடும் போது உடற்​தகு​தி, திறனை எப்​படி முன்​னேற்ற வேண்​டும் என நினைக்​கிறீர்​கள்?

A

இதில் முன்​னேற்​றம் அடைவதற்கு ஒன்​றும் இல்​லை. எனது பயிற்​சி​யாளர் நான் இலக்கை 54 விநாடிகளில் கடப்​பார் என கூறிய​போது யாரும் நம்​ப​வில்​லை. ஏனெனில் 42 வருடங்​களாக பி.டி.உஷா​வின் சாதனை முறியடிக்​கப்​ப​டா​மல் இருந்​தது. மேலும் கடந்த 3 வருடங்​களாக நானும் 56 விநாடிகளுக்கு கீழே இலக்கை எட்​ட​வில்​லை. இதனால் என்​னால் எப்​படி 54 விநாடிகளுக்​குள் ஓட முடி​யும் என அனை​வரும் சந்​தேகப்​பட்​டனர். எப்​போதும் தன்​னம்​பிக்கை வேண்​டும். நம்​மால் முடி​யும் என முதலில் நாம் நம்ப வேண்​டும். இது அங்கு பலரிடம் இல்​லை.

Q

வெற்றி பெற்​றாலும், பெறா​விட்​டாலும் எப்​போதுமே மகிழ்ச்​சி​யாக இருக்​கிறீர்​களே எப்​படி?

A

கடந்த முறை நான் பதக்​கம் வென்று திரும்​பியபோது வரவேற்க ஆட்​களே கிடை​யாது. ஆனால் இப்​போது என்னை பார்க்க என் வீட்டு முன்பு ஏராள​மானோர் காத்​திருந்​தனர். 3 வருடங்​களாக இன்​ஸ்​டாகி​ராம் நான் பயன்​படுத்​த​வில்​லை. ஆனால் கடந்த 3 நாட்​களாக நான் இன்​ஸ்​டாகி​ராமை விட்டு நகர முடிய​வில்​லை.

என்னை நட்​சத்​திரங்​கள் போல் கொண்​டாடு​கின்​றனர்​. இது மகிழ்ச்​சி​யாக உள்​ளது. இந்​த ஒரு மாதம்​ இதை அனுப​வித்​துக்​கொள்​, அடுத்​த மாதம்​ பயிற்​சிக்​கு திரும்​பி​விட வேண்​டும்​ என எனது பயிற்​சி​யாளர்​ கூறி​யுள்​ளார்​. இதனால்​ இந்​த இந்​த மாதம்​ இப்​படியே நகர்ந்​து​விடும்​. இவ்​வாறு வித்​யா ​ராம்​ராஜ் கூறி​னார்​.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in