ஆசிய பாரா விளையாட்டு போட்டி ஜப்பானில் இன்று தொடக்கம்

இந்தியாவிலிருந்து 168 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
ஆசிய பாரா விளையாட்டு போட்டி ஜப்பானில் இன்று தொடக்கம்
Updated on: 
1 min read

நகோயா: ஜப்​பானின் ஐச்​சி-நகோயா மாகாணத்​தில் 5-வது ஆசிய பாரா விளை​யாட்டு போட்டி இன்று (18-ம் தேதி) தொடங்கி வரும் 24-ம் தேதி வரை நடை​பெறுகிறது. தொடக்க விழா அணி வகுப்​பில் இந்​திய தேசி​யக் கொடியை பாரா பாட்​மிண்​டன் வீரர் பிரமோத் பகத், ஓட்டப்பந்தய வீராங்கனை சிம்ரன் சர்மா ஆகியோர் ஏந்​திச் செல்​கின்​றனர்.

இந்த தொடரில் இந்​தியா 11 விளை​யாட்​டுப் பிரிவு​களில் சுமார் 168 வீரர், வீராங்​க​னை​களு​டன் களமிறங்​கு​கிறது. கடந்த 2023-ம் ஆண்டு சீனா​வின் ஹாங்சோ நகரில் நடை​பெற்ற போட்​டி​யில் இந்​தி​யா​வில் இருந்து 303 பேர் பங்​கேற்​றிருந்​தனர்.

அப்​போது 29 தங்​கம், 31 வெள்​ளி, 51 வெண்​கலம் என மொத்​தம் 111 பதக்​கங்​களைக் கைப்​பற்​றி, பதக்​கப் பட்​டியலில் இந்​தியா 5-வது இடத்தை பிடித்து இருந்​தது. ஆசிய பாரா விளை​யாட்​டுப் போட்​டிகளில் இந்​தி​யா​வின் சிறந்த செயல்​பா​டாக இது அமைந்​திருந்​தது.

இம்​முறை பங்​கேற்​கும் வீரர்​களின் எண்​ணிக்கை குறைந்​ததற்​கு, போட்​டிகளில் பங்​கேற்​ப​தற்​கான ஒதுக்​கீடு​களில் செய்​யப்​பட்​டுள்ள கட்​டுப்​பாடு​களும், போட்டி நிகழ்ச்​சிகளில் ஏற்​பட்​டுள்ள மாற்​றங்​களும் காரண​மாகக் கூறப்​படு​கின்​றன. இதனால், முந்​தைய போட்​டி​யில் வென்ற 111 பதக்​கங்​களை மீண்​டும் எட்​டு​வது இந்​தி​யா​வுக்கு கடின​மாக இருக்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

கடந்த முறை 4-வது இடத்​தைப் பிடிக்​கும் வாய்ப்பை இந்​தியா ஒரு தங்​கப் பதக்க வித்​தி​யாசத்​தில் தென் கொரி​யா​விடம் இழந்​திருந்​தது. இம்​முறை அந்த இடத்​தைப் பிடிப்​ப​தற்​கும் கடும் போட்டி நில​வும்.

இதற்கிடையே பாட்மிண்டன், கால்பந்து உள்ளிட்ட போட்டிகள் நேற்று முன்தினமே தொடங்கின. இதில் பாட்மிண்டனில் மகளிர் இரட்டையர் எஸ்எல்3-எஸ்யு5 பிரிவில் இந்தியாவின் மான்ஷி ஜோஷி, துளசிமதி முருகேசன் ஜோடி நேற்று 2-வது வெற்றியை பதிவு செய்து அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறி பதக்கம் வெல்வதை உறுதி செய்தது.

ஆசிய பாரா விளையாட்டு போட்டி ஜப்பானில் இன்று தொடக்கம்
சிறார்கள் இணையத்தை பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in