

மோகி: ஆசிய ஜூனியர் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர், மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
சீனாவின் மோகி நகரில் இப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது. இந்தியாவுக்கான வெற்றி கோலை சானிகா மானே 17-வது நிமிடத்தில் அடித்தார். இதன் மூலம் ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க இந்திய அணி நேரடியாகத் தகுதி பெற்றுள்ளது.
ஆடவர் பிரிவிலும் முதலிடம்
ஆடவர் பிரிவு ஜூனியர் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் கொரியா அணியை வீழ்த்தி கோப்பையை வென்றதோடு உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்றது. இந்திய அணி சார்பில் அஜீத் யாதவ், அன்மோல் எக்கா, பிரப்தீப்சிங், அஷு மவுரியா ஆகியோர் தலா ஒரு கோலும், கொரிய அணி சார்பில் லீ மின்ஹியோக் ஒரு கோலும் அடித்தனர்.
நேபாள பெரு வெள்ளத்தில் மாயமான 80 பேரை தேடும் பணி தொடர்கிறது