

‘ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026’ ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் வரும் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறவுள்ளன. அதிகாரப்பூர்வ தொடக்க விழாவுக்கு முன்னதாக சில போட்டிகள் தொடங்குகின்றன. இதன்படி கால்பந்து போட்டி கடந்த 14-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் போட்டி வரும் 17-ம் தேதி தொடங்குகிறது.
ஆசிய விளையாட்டு போட்டியில் மொத்தம் 45 நாடுகள் 43 வகையான விளையாட்டுகளில் பங்கேற்கின்றன. 2023-ல் ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 28 தங்கம், 38 வெள்ளி மற்றும் 41 வெண்கலம் உள்பட மொத்தம் 107 பதக்கங்களை வென்று சாதனை படைத்த இந்தியா, இந்த முறை கூடுதல் பதக்கங்களை கைப்பற்றுவதில் ஆர்வம் காட்டக்கூடும். இந்தியாவில் இருந்து மும்றை 267 வீரர்கள், 234 வீராங்கனைகள் என 501 பேர் ஆசிய விளையாட்டில் பங்கேற்கின்றனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 36 பேரும் அடங்குவர். இந்திய அணி 36 வகையிலான விளையாட்டுகளில் கலந்துகொள்கிறது.
வரும் 2036-ல் கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை பெறுவதற்கான நடவடிக்கைகளில் இந்தியா களமிறங்கி உள்ளது. இதனால் ஜப்பான் ஆசிய விளையாட்டு போட்டி இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
காயம் காரணமாக ஈட்டி எறிதல் நட்சத்திரமான நீரஜ் சோப்ரா ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கவில்லை. எனினும் இந்தியா சார்பில் உறுதியாக பதக்கம் வெல்லக்கூடிய நட்சத்திரங்களின் பட்டியலில் பி.வி. சிந்து (பாட்மிண்டன்), மனு பாகர் (துப்பாக்கிச் சுடுதல்), லோவ்லினா போர்கோஹெய்ன் (குத்துச்சண்டை), அமன் செகாவத் (மல்யுத்தம்), மீராபாய் சானு (பளுதூக்குதல்) ஆகியோர் உள்ளனர்.
கிரிக்கெட்டில் ஆடவர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் முயற்சியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமயிலான இந்திய அணி களமிறங்க உள்ளது. இளம் பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷியும் அணியில் இடம்பெற்றுள்ளார். மகளிர் பிரிவிலும் இந்திய நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில் களமிறங்குகிறது.
2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றுகளாக ஆசிய விளையாட்டு ஹாக்கி போட்டி அமைந்துள்ளது. ஆசிய விளையாட்டு ஹாக்கி போட்டிகளில் ஆடவர், மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகள் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடித் தகுதி பெறும். இதனால் இந்திய அணிகள் தீவிர முனைப்புடன் செயல்படக்கூடும்.
ஹாங்சோ ஆசிய விளையாட்டில் மகளிர் அணிக்கான ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா வெண்கலப் பதக்கம் வெல்ல உதவிய அனஹத் சிங், இம்முறையும் களமிறங்குகிறார். ஹாங்சோவில் அபய் சிங்குடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவிலும் வெண்கலம் வென்றிருந்த அனஹத் சிங் தற்போது சிறந்த பார்மில் உள்ளதால் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தக்கூடும். ஸ்குவாஷ் போட்டிகளில் தனிநபர் பிரிவுகளுக்கான ஒலிம்பிக் இடங்கள் வழங்கப்படும். இதனால் இந்திய வீரர், வீராங்கனைகள் கூடுதல் முனைப்புடன் செயல்படக்கூடும்.
ஹாங்சோவில், இந்தியா துப்பாக்கி சுடுதல், தடகளம், வில்வித்தையில் ஆதிக்கம் செலுத்தியிருந்தது. இம்முறையும் இந்த விளையாட்டுகளில் இந்தியா பதக்க வேட்டை நிகழ்த்தக்கூடும். இந்த விளையாட்டுகளுடன் பாட்மிண்டன், மல்யுத்தம், குத்துச்சண்டை, வாள்வீச்சு, வுஷூ ஆகியவற்றிலும் இந்திய வீரர், வீராங்கனைகள் முத்திரைபதிக்கக்கூடும்.
பங்கேற்கும் இந்திய அணியினர் விவரம்
வில்வித்தை: தீரஜ் பொம்மதேவரா, நீரஜ் சவுகான், யஷ்தீப் போகே. கீர்த்தி ஷர்மா, குங்கும் மொஹோத், அங்கிதா பகத், சாஹில் ஜாதவ், குஷால் தலால், கணேஷ் மணிரத்னம் திருமுரு, ஜோதி சுரேகா வென்னம், சிக்கதா தனிபார்த்தி, பிரித்திகா பிரதீப்.
ஜிம்னாஸ்டிக்ஸ்: பிரணதி நாயக் (மகளிர் வால்ட், மகளிர் ஆல்-அரவுண்ட்).
தடகளம்: குரிந்தர்வீர் சிங் (ஆடவர் 100 மீ, கலப்பு 4x100 மீ ரிலே), அனிமேஷ் குஜூர் (ஆடவர் 100 மீ, 200 மீ, கலப்பு 4x100 மீ ரிலே), ராஜேஷ் ரமேஷ் (ஆடவர் 400 மீ, ஆடவர் 4x400 மீ ரிலே), விஷால் தென்னரசு (ஆடவர் 400 மீ, 4x400 மீ ரிலே), கிருஷ்ணன் குமார் (ஆடவர் 800 மீ), முகமது அப்சல் புலிக்கலகத் (ஆடவர் 800 மீ), யூனுஸ் ஷா (ஆடவர் 1500 மீ), குல்வீர் சிங் (ஆடவர் 1500 மீ, 5000 மீ, 10000 மீ).
சவான் பர்வால் (ஆடவர் மராத்தான்), கார்த்திக் கர்கேரா (ஆடவர் மாரத்தான்), யஷாஸ் பலாக் ஷா (ஆடவர் 400 மீ தடை தாண்டுதல் ஓட்டம்), சந்தோஷ் குமார் தமிழரசன் (ஆடவர் 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம்), அவினாஷ் சேபிள் (ஆடவர் 3000மீ ஸ்டீபிள்சேஸ்), பிரணவ் பிரமோத் குரவ் (கலப்பு 4x100 மீ ரிலே), முகமது அஷ்பக் (ஆடவர் 4x400 மீ ரிலே), தர்மவீர் சவுத்ரி (ஆண்கள் 4x400 மீ ரிலே).
ஜெய் குமார் (ஆடவர் 4x400மீ ரிலே, கலப்பு 4x400மீ ரிலே), மனு தெக்கினாலில் சாஜி (ஆடவர் 4x400 மீ ரிலே, கலப்பு 4x400 மீ ரிலே), ஆதர்ஷ் ராம் ஜோதி சங்கர் (ஆடவர் உயரம் தாண்டுதல்), சர்வேஷ் குஷாரே (ஆடவர் உயரம் தாண்டுதல்), குல்தீப் குமார் (ஆடவர் போல்வால்ட்), தேவ் மீனா (ஆடவர் போல்வால்ட்), முரளி சங்கர் (ஆடவர் நீளம் தாண்டுதல்), பிரவீன் சித்திரவேல் (ஆடவர் மும்முறை தாண்டுதல்).
கார்த்திக் உன்னிகிருஷ்ணன் (ஆடவர் மும்முறை தாண்டுதல்), கரண்வீர் சிங் (ஆடவர் குண்டு எறிதல்), தஜிந்தர்பால் சிங் தூர் (ஆடவர் குண்டு எறிதல்), தம்னீத் சிங் (ஆடவர் சங்கிலி குண்டு எறிதல்), பிரவீன் குமார் (ஆடவர் சங்கிலி குண்டு எறிதல்), ரோஹித் யாதவ் (ஆடவர் ஈட்டி எறிதல்), யாஷ் வீர் சிங் (ஆடவர் ஈட்டி எறிதல்), தவுஃபீக் நவுஷாத் (டெகாத்லான்), தேஜஸ்வின் சங்கர் (டெகாத்லான்).
ஹரிதா பத்ரா (மகளிர் 200 மீ, கலப்பு 4x100 மீ ரிலே), பிராச்சி சவுத்ரி (மகளிர் 400 மீ, 4x400 மீ ரிலே), கிரண் பஹல் (மகளிர் 400 மீ, 4x400 மீ ரிலே), கவுதமி ஜெயராமன் (மகளிர் 800 மீ), பூஜா (மகளிர் 800 மீ, 1500 மீ), பருல் சவுத்ரி (மகளிர் 1500 மீ, 5000 மீ, 3000 மீ ஸ்டீபிள்சேஸ்), சீமா (மகளிர் 5000 மீ, 10000 மீ), பிரியங்கா கோஸ்வாமி (மகளிர் மாரத்தான், நடைப்போட்டி), மஞ்சு ராணி (மகளிர் மாரத்தான், நடைப்போட்டி), ஜோதி யாராஜி (மகளிர் 100 மீ தடை ஓட்டம்), நந்தினி கொங்கன் (மகளிர் 100 மீ தடை ஓட்டம்).
உன்னதி ஐயப்பா பொல்லாண்ட் (மகளிர் 200 மீ, கலப்பு 4x100 மீ ரிலே), அனு ராகவன் (மகளிர் 400 மீ தடை ஓட்டம்), வித்யா ராம்ராஜ் (மகளிர் 400 மீ தடை ஓட்டம், 4x400 மீ ரிலே), அங்கிதா தியானி (மகளிர் 3000 மீ ஸ்டீபிள்சேஸ்), தமன்னா (மகளிர் 4x100 மீ தொடரோட்டம், கலப்பு 4x100 மீ ரிலே), ஸ்ரபானி நந்தா (மகளிர் 4x100 மீ ரிலே), அபிநயா ராஜராஜன் (மகளிர் 4x100 மீ ரிலே), ஸ்னேஹா சத்யநாராயணா (மகளிர் 4x100மீ தொடரோட்டம், கலப்பு 4x100மீ ரிலே), சுதேஷ்னா ஷனுவள்ளி (மகளிர் 4x100மீ ரிலே), ராஷ்தீப் கவுர் (மகளிர் 4x400மீ தொடரோட்டம், கலப்பு 4x400மீ
ரிலே), அன்சா பாபு (மகளிர் 4x400மீ ரிலே, கலப்பு 4x400மீ ரிலே), மச்செட்டிரா ராஜு பூவம்மா (மகளிர் 4x400மீ ரிலே), குமாரி சலோனி (மகளிர் 4x400மீ ரிலே) நீரு பதக் (மகளிர் 4x400மீ ரிலே).
பூஜா சிங் (மகளிர் உயரம் தாண்டுதல்), சுப்ரியா சிந்திகரே பசவராஜு (மகளிர் உயரம் தாண்டுதல்), பரணிகா இளங்கோவன் (மகளிர் போல்வால்ட்), சிந்து கணேஷ் (மகளிர் போல்வால்ட்), ஷைலி சிங் (மகளிர் நீளம் தாண்டுதல்), ஆன்சி சோஜன் எடப்பள்ளி (மகளிர் நீளம் தாண்டுதல்), நிஹாரிகா வசிஷ்ட் (மகளிர் மும்முறை தாண்டுதல்).
ஆஷா இளங்கோ (மகளிர் மும்முறைத் தாண்டுதல்), மன்ப்ரீத் கவுர் (மகளிர் குண்டு எறிதல்), கிருஷ்ணா ஜெயசங்கர் மேனன் (மகளிர் குண்டு எறிதல்), சான்யா யாதவ் (மகளிர் வட்டு எறிதல்), சீமா கலிராம்னா (மகளிர் வட்டுஎறிதல்), தான்யா சவுத்ரி (மகளிர் சங்கிலி குண்டு எறிதல்), அனுஷ்கா யாதவ் (மகளிர் சங்கிலி குண்டு எறிதல்), பூஜா (ஹெப்டத்லான்), அனாமிகா (ஹெப்டத்லான்).
ஆசிய விளையாட்டு செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை
குத்துச்சண்டை: ஆடவர்: ஜதுமணி சிங் (55 கிலோ), சச்சின் சிவாச் (60 கிலோ), சுமித் குண்டு (70 கிலோ), அங்குஷ் (80 கிலோ), கபில் பொக்காரியா (90 கிலோ), நரேந்தர் பெர்வால் (+90 கிலோ).
மகளிர்: சாக் ஷி சவுத்ரி (51 கிலோ), பிரீத்தி பவார் (54 கிலோ), பிரியா கங்காஸ் (60 கிலோ), பர்வீன் ஹூடா (65 கிலோ), லோவ்லினா போர்கோஹெய்ன் (75 கிலோ).
படகு வலித்தல்: ஹிதேஷ் கேவத், பிரத்யும்னா சிங் ரத்தோட், ஷிகா சவுஹான், பல்லவி ஜக்தாப், ரினா சென், புரோஹித் பரோய், பிரசன்ன குமார், செம்படியில் சத்யபிரகாஷ், நவுச்சா சிங் லைடோஞ்சம், ஞானேஷ்வர் சிங் பிலேம், ராஜு ராவத், ஹர்ஷ்வர்தன் சிங் ஷக்தாவத், வரீந்தர் சிங், ஒயினம் அருண் சிங், நேஹா தேவி லீச்சோன்பம், சோனியா தேவி பைரெம்பம், மேகா பிரதீப், பூஜா, பார்வதி கீதா, தனமஞ்சூரி தேவி குவைரக்பம்.
சைக்கிளிங்: விஷாவ்ஜீத் சிங், டேவிட் பெக்காம் எல்கடோச்சூங்கோ, ஜெம்ஷ் சிங் கெய்தெல்லக்பம், ரொனால்டோ சிங் லைடோஞ்சம், ஹர்ஷ்வீர் சிங் செகோன், ரோஜித் சிங் யாங்லெம், செலஸ்டினா செலோப்ராய், மீனாட்சி ரோஹில்லா, கீர்த்தி ரங்கசாமி சிக்கா, பூஜா பாபன் டானோல், ஹர்ஷிதா ஜாகர், சரிதா குமாரி, திரியாஷா பால், ஸ்வஸ்தி சிங்.
குதிரையேற்றம்: ஹிருதய் சேடா, டோனோ டி மாகியோ, கவுரவ் பண்டிர், மில்லி, ஜெய் சுத், கூஃபி லா பெர்லா, ஸ்ருதி வோரா, மேக்னனிமஸ், அஹான் குமார், பொலிவர் ஜியோ கிரானோ, ஆஷிஷ் லிமாயே, வில்லி பீ டன், ஃபுவாத் மிர்சா, அர்ஜன் சிங் நாக்ரா.
வாள்வீச்சு: சச்சின், ஆதித்யா பட்சர், தேஜஸ் மனோஜ் பாட்டீல், ஹேமாஷ் சிங் சனாசம், லக் ஷய் பட்சர், கிஷோ நிதி, குமரேசன் பத்மா, கரண் சிங், விஷால் தாபர், மினா தேவி நவுரெம், ஜாய்ஸ் அஷிதா ஸ்டாலின்ராஜ், கனுப்ரியா சாவ்லா, சோனியா தேவி வைகோம், மித்வா ஜெசங்பாய் சவுதாரி, யஷ்கீரத் கவுர் ஹேயர், தனிக் ஷா காத்ரி, பிராச்சி லோகன், பவானி தேவி, ஸ்ரேயா குப்தா, ஜெபர்லின் ஜானி, ரெக்ஸ்லின் சிம்லா, ஸ்ருதி ஜோஷி.
கராத்தே: சேத்தன் பட், அலிஷா சவுத்ரி. குராஷ்: விபின் குமார், விஷால், யாஷ் குமார், பார்தி, சங்கீதா பல்ஹாரா, பிங்கி சவுஹான்.
கலப்பு தற்காப்புக் கலைகள்: வருண் சன்யால், சுசிகா தாரியல்.
துடுப்பு படகு பந்தயம்: அரவிந்த் சிங், நவ்தீப் சிங், குல்விந்தர் சிங், உஜ்வல் குமார் சிங், சத்னம் சிங் குர்டே, ஜாகர் கான், சல்மான் கான், பால்ராஜ் பன்வார், விபுல் சதீஷ், சவுரவ் குமார், நிதின் குமார், யோகேஷ் குமார், ஜஸ்விந்தர் சிங், பாபு லால் யாதவ், ரோஹித், அஜய் தியாகி, ஜஸ்மாயில் சிங், பூனம், அலீனா ஆன்டோ, டெண்டன்தோய் தேவி ஹாபிஜம், குர்பானி கவுர், அன்ஷிகா பார்தி.
பாய்மரப் படகு: விஷ்ணு சரவணன், மனு பிரான்சிஸ், பிரின்ஸ் குரிசின்கல் நோபல், ரவீந்திர குமார் ஷர்மா, கத்யா இடா கோயல்ஹோ, நேத்ரா குமணன், ஹர்ஷிதா தோமர், ஷிடல் வர்மா, மஹி வர்மா, ஷ்ரத்தா வர்மா,
துப்பாக்கி சுடுதல்: ஆடவர்: கமல்ஜீத், ஆகாஷ் பரத்வாஜ், கெடார்லிங் உச்சகன்வே, அனிஷ் பன்வாலா, ஹிமான்ஷு திலான், பர்த் மானே, ருத்ராங்க் ஷ் பாட்டீல். நீரஜ் குமார், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், ஷபத் பரத்வாஜ், கைனன் செனாய், அஹ்வார் ரிஸ்வி, பாவ்தேக் சிங் கில், மைராஜ் அகமது கான், அனந்த் ஜீத் சிங் நருகா.
மகளிர்: சுருச்சி சிங், மனு பாகர், இஷா சிங், ராஹி சர்னோபத், விதர்சா கோச்சலும்கள் வினோத், சோனம் உத்தம் மஸ்கர், இளவேனில் வாளரிவன், ஆஷி சவுக்சே, திலோத்தமா சென், நீரு தண்டா, ஆஷிமா அஹ்லாவத், மனிஷா கீர், மகேஸ்வரி சவுஹான், பரினாஸ் தாலிவால், ரைஸா திலான்.
ஸ்குவாஷ்: ஆடவர்: சுராஜ் குமார் சந்த், வீர் சோட்ரானி, வேலவன் செந்தில் குமார், அபய் சிங்.
மகளிர்: அனஹத் சிங், ஜோஷ்னா சின்னப்பா, தன்வி கண்ணா, ஷமீனா ரியாஸ்.
அலைச்சறுக்கு: கிஷோர் குமார் (ஆடவருக்கான ஷார்ட்போர்டு), சிவராஜ் பாபு (ஆடவருக்கான ஷார்ட்போர்டு), கமலி மூர்த்தி (மகளிருக்கான ஷார்ட்போர்டு), சுகர் சாந்தி பனார்சே (மகளிருக்கான ஷார்ட்போர்டு).
நீச்சல்: பெனடிக்சன் ரோஹித் பெனிஸ்டன் மாணிக்கராஜ், ரிஷப் தாஸ், வேதாந்த் மாதவன், ஆகாஷ் மணி, ஹரி நடராஜ், ஆர்யன் நேஹ்ரா, உத்கர்ஷ் சந்தோஷ் பாட்டீல், சஜன் பிரகாஷ், ஹீர் கிதேஷ் ஷா, தக் ஷன் சசிகுமார், அனீஷ் சுனில் குமார் கவுடா, தனுஷ் சுரேஷ்.
டேபிள் டென்னிஸ்: ஆடவர்: சத்தியன் ஞானசேகரன், பயாஸ் ஜெயின், மனுஷ் ஷா, மானவ் தாக்கர், ஹர்மீத் தேசாய்.
மகளிர்: ஜா அகுலா, தியா சித்லே, சிண்ட்ரலா தாஸ், யஷஸ்வினி கோர்படே, சுதிர்தா முகர்ஜி. தேக்வாண்டோ: ரூபா பேயர் (மகளிர் தனிநபர் பூம்சே), காஷிஷ் மாலிக் (மகளிர் 57 கிலோ எடைப் பிரிவு), ஜோதி யாதவ் (மகளிர் 67 கிலோ எடைப் பிரிவு).
டென்னிஸ்: சுமித் நாகல் (ஆடவர் ஒற்றையர்), யுகி பாம்ப்ரி (ஆடவர் இரட்டையர்), தட்சிணேஸ்வர் சுரேஷ் (ஆடவர் இரட்டையர்), அனிருத் சந்திரசேகர் (ஆடவர் இரட்டையர்), என்.ராம் பாலாஜி (ஆடவர் இரட்டையர்), அங்கிதா ரெய்னா (மகளிர் இரட்டையர்), ருதுஜா போஸ்லே (மகளிர் இரட்டையர்).
வாலிபால்: ஆடவர் அணி: சிராக், அமித், முத்துசாமி அப்பாவு, ஜெரோம் வினித் சார்லஸ், முஹம்மது நிஹால் சத்தம் குலங்கரா, ஜான் ஜோசப் ஏந்துங்கல் ஜோசப், ஜோயல் பெஞ்சமின் ஜெபராஜ், ஆனந்த் கொட்டாரத்தில், ஓம் வசந்த் லாட், அஷ்வல் ராய், ஷிகர் சிங், ஹேமந்த் புல்பரம்பில்.
பளுதூக்குதல்: மீராபாய் சானு (49 கிலோ எடைப் பிரிவு), ஞானேஷ்வரி யாதவ் (53), சீரம் நிருபமா தேவி (61), ஹர்ஜிந்தர் கவுர் (69).
மல்யுத்தம்: மகளிர்: திபான்ஷி (50 கிலோ எடைப் பிரிவு), அன்டிம் பங்ஹால் (53), மனிஷா பன்வாலா (57), மான்ஷி அஹ்லாவத் (62), நிஷா தஹியா (68), பிரியா மாலிக் (76).
ஆடவர்: அமன் ஷெராவத் (57), சுஜீத் கல்கல் (65), சாகர் ஜக்லான் (ஃப்ரீஸ்டைல் 74 கிலோ), தீபக் புனியா (ஃப்ரீஸ்டைல் 97 கிலோ), ரஜத் ராகுல் (ஃப்ரீஸ்டைல் 125 கிலோ), சுமித் தலால் (கிரகோ-ரோமன் 60 கிலோ), தீபக் (கிரகோ-ரோமன் 67 கிலோ), அமன் (கிரகோ-ரோமன் 77 கிலோ), சுனில் குமார் (கிரகோ-ரோமன் 87 கிலோ), நிதேஷ் குமார் (கிரகோ-ரோமன் 97 கிலோ).
வுஷு: ஆர்யன் (56 கிலோ எடைப் பிரிவு), விக்ராந்த் பாலியன் (75), சுராஜ் சிங் மயங்கலம்பம் (சங்குவான்), நியமன் வாங்சு (சங்குவான்), அபர்னா (52), நொரேம் ரோஷிபினா தேவி (60), லாங்லென்டோம்பி தேவி ஹஞ்சபம் (நன்குவான் & நந்தாவ்),
ஜூடோ: அஷ்மிதா டே, யாமினி மவுர்யா, இனுங்கன்பி தகெல்லம்பாம்.
பாட்மிண்டன்: லக்ஷ்யா சென், ஆயுஷ் ஷெட்டி, எச்.எஸ்.பிரணாய், கிடாம்பி காந்த், தருண் மன்னேபள்ளி, சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, ஷிராக் ஷெட்டி, ஹரிஹரன் அம்சகருணன், எம்.ஆர்.அர்ஜுன், துருவ் கபிலா, பி.வி.சிந்து, உன்னதி ஹூடா, தேவிகா சிஹாக், தன்வி ஷர்மா, இஷாராணி பருவா, ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த், கவிப்ரியா செல்வம், சிம்ரன் சிங்கி, தனிஷா கிரஸ்டோ.