ஆசிய விளையாட்டு போட்டி: கபடியில் இந்தியாவுக்கு இரட்டை தங்கம்

ஆசிய விளையாட்டு போட்டி: கபடியில் இந்தியாவுக்கு இரட்டை தங்கம்
Updated on: 
5 min read

நகோயா: ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் கபடி​யில் இந்​தியா ஆடவர், மகளிர் அணி​கள் தங்​கப் பதக்​கம் வென்று அசத்​தின.

20-வது ஆசிய விளை​யாட்டு போட்டி ஜப்​பானின் ஐச்​சி-நகோயா மாகாணத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதன் 8-வது நாளான நேற்று மகளிருக்​கான கபடி இறு​திப் போட்​டி​யில் நடப்பு சாம்​பிய​னான இந்​திய அணி, ஈரானுடன் மோதி​யது. இதில் இந்​திய அணி 37-34 என்ற புள்​ளி​கள் கணக்​கில் வெற்றி பெற்று சாம்​பியன் பட்​டத்தை தக்​வைத்​துக் கொண்​டது.

ஈரான் மகளிர் அணி வலது பக்​கத்​தில் பலவீன​மாக இருந்​தது. இதை சாதக​மாக மாற்​றிக் கொண்ட இந்​திய அணி​யின் ரெய்​டர்​களான நிகி​தா, கேப்​டன் பூஜா, சஞ்சு தேவி தொடர்ச்​சி​யாக அந்த பகு​தி​யில் தாக்​குதல் தொடுத்து புள்​ளி​களை குவித்​தனர்.

தொடக்​கத்​தில் இந்​திய மகளிர் அணி 3-1 என முன்​னிலை வகித்​தது. ஈரான் அணி​யில் 3 வீராங்​க​னை​கள் மட்​டுமே இருந்த நிலை​யில் கடுமை​யாக போராடி ஒரு கட்​டத்​தில் 7-7 என சமநிலையை எட்​டினர். முதல் பாதி ஆட்​டம் முடிவடைய 6 நிமிடங்​கள் இருந்த நிலை​யில் ஈரான் அணி ஆல் அவுட் ஆனது. ரெய்​டு, டிஃபன்​ஸில் ஆதிக்​கம் செலுத்​திய இந்​திய மகளிர் அணி முதல் பாதி முடி​வில் 22-16 என முன்​னிலை வகித்​தது.

2-வது பாதி ஆட்​டத்​தில் ஈரானின் ரெய்​டர்​களான அத்​தேனா மடாடி, ஐனாஸ் ஃபரா​மார்ஜி ஆகியோர் இந்​திய அணி​யின் டிஃபன்ஸை தொடர்ந்து சோதித்​தனர். டிஃபன்​ஸை​யும் அந்த அணி வலுப்​படுத்​தி​ய​தால் ஒரு கட்​டத்​தில் இந்​திய அணி ஆல் அவுட் ஆக ஈரான் அணி 27-28 என நெருங்​கியது. இதனால் ஆட்​டத்​தில் பரபரப்பு ஏற்​பட்​டது.

எனினும் இந்​திய வீராங்​க​னை​கள் பதற்​றம் அடை​யால் தங்​களது அனுபவத்​தால் அழுத்​தத்தை சரி​யாக கையாண்​டனர். பதற்​றமடைவதற்​குப் பதிலாக, தங்​கள் டிஃபன்ஸை வலுப்​படுத்​தினர். மிக​வும் கவன​மாக செயல்​பட்டு ஈரான் அணி அதிக ரிஸ்க் எடுக்​கக் கட்​டாயப்​படுத்​தினர்.

இந்த உத்தி பலன் கொடுத்​தது. போட்டி முடிவடைய ஒரு நிமிடம் மீதமிருந்த நிலை​யில் இந்​திய அணி 37-31 என முன்​னிலை பெற்​றது. ஈரான் தனது இறுதி ரெய்​டு​களில் முழு பலத்​தை​யும் பிரயோகித்​தது. எனினும் அந்த அணி​யால் 34-37 என்று நெருங்​கிவர மட்​டுமே முடிந்​தது. இந்​திய மகளிர் அணி, ஈரான் வீராங்​க​னை​களை அவுட் செய்​ததன் வாயி​லாக 26 புள்​ளி​களை​யும், போனஸாக 8 புள்​ளி​களை​யும், ஆல் அவுட் செய்​ததன் வாயி​லாக 2 புள்​ளி​களை​யும், சூப்​பர் டேக்​கிள் வாயி​லாக ஒரு புள்​ளியை​யும் என ஒட்​டுமொத்​த​மாக 37 புள்​ளி​களை குவித்​தது.

ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் இந்​திய மகளிர் அணி தங்​கப் பதக்​கம் வெல்​வது இது 4-வது முறை​யாகும். கடந்த 2010-ம் ஆண்டு குவாங்சூ ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் மகளிர் கபடி முதன்​முறை​யாக அறி​முக​மாகி இருந்​தது. அந்​தத் தொடரில் இருந்து தொடர்ச்​சி​யாக 2 முறை தங்​கப் பதக்​கம் வென்ற இந்​திய மகளிர் அணி 2018-ம் ஆண்டு ஜகார்த்தா ஆசிய விளை​யாட்​டில் ஈரானிடம் தங்​கப் பதக்​கத்தை இழந்​திருந்​தது. எனினும் 2022-ம் ஆண்டு நடை​பெற்ற ஆசிய விளை​யாட்​டில் இந்​திய மகளிர் அணி மீண்​டும் தங்​கப் பதக்​கம் கைப்​பற்​றியது. தற்​போது சாம்​பியன் பட்​டத்தை தக்​க​வைத்​துக் கொண்​டுள்​ளது.

ஆட​வர் அணி

ஆடவருக்​கான கபடி இறு​திப் போட்​டி​யில் நடப்பு சாம்​பிய​னான இந்​தி​யா, ஈரான் அணி​யுடன் மோதி​யது. இதில் இந்​திய அணி 40-34 என்ற புள்​ளி​கள் கணக்​கில் வெற்றி பெற்று தங்​கப் பதக்​கம் வென்​றது. ஆட்​டத்​தின் பாதி​யில் இந்​திய அணி தடு​மாறியது. எனினும் ரெய்​டர்​களான அர்​ஜுன் தேஸ்​வால், தேவாங் ஆகியோர் சிறப்​பாக செயல்​பட்டு போட்​டியை இந்​தி​யா​வின் பக்​கம் திருப்​பினர். ஈரான் அணி ஒவ்​வொரு புள்​ளியை​யும் தனது கடைசிப் புள்ளி போல போராடிப் பெற்​றது. இதனால் இந்​திய அணி எளி​தில் நிலைத்​தன்​மைக்கு வர அனு​ம​திக்​க​வில்​லை.

முதல் பாதி முடி​வில், ஈரான் 18-17 என்ற கணக்​கில் முன்​னிலை​யில் இருந்​தது. ஈரான் அணி​யின் தொடர்ந்து இந்​தி​யா​வுக்கு அழுத்​தம் கொடுத்​தது. ஆனால் இந்​திய அணி பதற்​றமடைய​வில்​லை. அதற்​குப் பதிலாக, அவர்​கள் ஆட்​டத்​தின் வேகத்தை மாற்​றி​னார்​கள். தங்​கள் ரெய்​டர்​களை நம்​பி​னார்​கள் மற்​றும் அனுபவத்​தைத் தங்​களின் பலமாக மாற்​றினர். அர்​ஜுனும் தேவாங்​கும் ஈரானின் பகு​திக்​குள் ரெய்டு சென்று முக்​கிய​மான புள்​ளி​களு​டன் திரும்​பினர். இது படிப்​படி​யாக ஈரானைப் பின்​வாங்​கச் செய்​தது.

மேலும் இந்​தியா தனது தற்​காப்பு அரண்​களை​யும் இறுக்​கியது, இதனால் ஈரான் ரெய்​டர்​கள் புள்​ளி​களைப் பெறு​வது கடின​மாகியது. இந்​தியா ஒரு ஆல்​-அவுட்​டைச் செய்து தனது முன்​னிலையை 29-24 ஆக உயர்த்​தி​ய​போது ஆட்​டத்​தில் திருப்​பு​முனை ஏற்​பட்​டது. அங்​கிருந்து இந்​தி​யர்​கள் தங்​கள் அனுபவத்​தின் மற்​றொரு பரி​மாணத்​தைக் காட்​டினர். அவசர​மாகப் புள்​ளி​களை குவிப்​ப​தற்கு பதிலாக ஆட்​டத்​தின் வேகத்​தைக் குறைத்​தனர். ரெய்​டர்​கள் அதி​கப்​படி​யான ரிஸ்க் எடுக்​காமல் பாது​காப்​பாகத் திரும்​பினர். இது ஈரானை ரிஸ்க் எடுக்​கக் கட்​டாயப்​படுத்​தி​யது.

புள்​ளி​கள் தேவைப்​பட்​ட​தால், ஈரான் ரெய்​டர்​கள் இந்​தி​யா​வின் பகு​திக்​குள் ஆழமாக ஊடுரு​வத் தொடங்​கினர். ஆனால் அவர்​களால் தற்​காப்பு அரணின் பிடி​யில் இருந்து தப்ப முடி​யாமல் போனது.

இந்​திய ஆடவர் அணி, ஈரான் வீரர்​களை அவுட் செய்​ததன் வாயி​லாக 30 புள்​ளி​களை​யும், போனஸாக 4 புள்​ளி​களை​யும், ஆல் அவுட் செய்​ததன் வாயி​லாக 2 புள்​ளி​களை​யும், சூப்​பர் டேக்​கிள் வாயி​லாக 3 புள்​ளி​களை​யும், டெக்​னிக்​கலாக ஒரு புள்​ளியை​யும் பெற்​றது.

ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் இந்​திய ஆடவர் அணி தங்​கப் பதக்​கம் வெல்​வது இது 9-வது முறை​யாகும். கடந்த 2018-ம் ஆண்டு ஆசிய விளை​யாட்​டில்​ மட்​டுமே இந்​தி​ய அணி பதக்​க வாய்ப்​பை தவற​விட்​டு இருந்தது.

ஸ்குவாஷ் கலப்பு இரட்டையரில் இந்திய ஜோடிக்கு வெண்கலம்

ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் ஸ்கு​வாஷ் கலப்பு இரட்​டையர் அரை இறு​தி​யில் நேற்று இந்​தி​யா​வின் ஜோஷ்னா சின்​னப்​பா, வேல​வன் செந்​தில் குமார் ஜோடி, ஹாங் காங்​கின் டாங் மிங்​-ஹாங், லீ கா யி ஜோடியை எதிர்த்து விளை​யாடியது.

இதில் ஜோஷ்னா சின்​னப்​பா, வேல​வன் செந்​தில்​கு​மார் ஜோடி 10-11, 11-2, 10-11 என்ற செட் கணக்​கில் தோல்வி அடைந்​தது. அரை இறு​தி​யில் தோல்வி அடைந்த ஜோஷ்னா சின்​னப்​பா, வேல​வன் செந்​தில்​கு​மார் ஜோடி வெண்​கலப் பதக்​கம் பெற்​றது. இவர்​கள் இரு​வருமே தமிழகத்​தைச் சேர்ந்​தவர்​கள் ஆவர். 40 வயதாகும் ஜோஷ்னா சின்​னப்​பாவுக்கு இது 6-வது ஆசிய விளை​யாட்​டுப் பதக்​க​மாகும். அவர், ஏற்​கெனவே ஆசிய விளை​யாட்டு போட்​டிகளில் 2 வெள்ளி மற்​றும் 3 வெண்​கலப் பதக்​கங்​களை வென்​றுள்​ளார்​.

ஸ்குவாஷில் ஒலிம்பிக் தகுதியை நெருங்கும் அனஹத், அபய் சிங்

ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் ஆடவருக்​கான ஸ்கு​வாஷ் அரை இறுதி சுற்​றில் இந்​தி​யா​வின் அபய் சிங், பாகிஸ்​தானின் முகமது இஃர்​பானை எதிர்த்து விளை​யாடி​னார். இதில் அபய் சிங் 11-3, 12-10, 11-6 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று இறு​திப் போட்​டிக்கு முன்​னேறி​னார்.

மகளிர் பிரி​வில் இந்​தி​யா​வின் அனஹத் சிங் அரை இறு​திப் போட்​டி​யில் 9-11, 11-13, 12-10, 11-6, 11-3 என்ற செட் கணக்​கில் ஜப்​பானின் சட்​டோமி வத்​த​னாபேவை வீழ்த்தி இறு​திப் போட்​டிக்கு முன்​னேறி​னார். இறு​திப் போட்​டி​யில் அபய் சிங்​கும், அனஹத் சிங்​கும் வெற்றி பெறும் பட்​சத்​தில் தங்​கப் பதக்​கம் வெல்​வதுடன் 2028-ம் ஆண்டு லாஸ்​ஏஞ்​சல்ஸ் நகரில் நடை​பெற உள்ள ஒலிம்​பிக் போட்​டிக்கு நேரடி​யாக தகுதி பெறு​வார்​கள்​.

ஆடவர் குண்டு எறிதலில் தஜிந்தர்பாலுக்கு வெள்ளி

ஆசிய விளை​யாட்​டில் ஆடவருக்​கான குண்டு எறிதல் இறு​திப் போட்​டி​யில் இந்​தி​யா​வின் தஜிந்​தர்​பால் சிங் டூர் 20.64 மீட்​டர் தூரம் எறிந்து 2-வது இடம் பிடித்து வெள்​ளிப் பதக்​கம் வென்​றார். ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் அவர், பதக்​கம் வெல்​வது இது 3-வது முறை​யாகும். தஜிந்​தர்​பால் சிங் கடந்த 2018 மற்​றும் 2022-ம் ஆண்டு ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் தங்​கப் பதக்​கம் வென்​றிருந்​தார். ஈரானின் முகம்​மத்​ரேசா தாய்​பிசே (20.81) தங்​கப் பதக்​க​மும், சவுதி அரேபி​யா​வின் முகமது தொலு (20.48) வெண்​கலப் பதக்​க​மும் வென்​றனர்​.

மாரத்தானில் வெள்ளி வென்று சவான் பர்வால் சாதனை

ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் ஆடவருக்​கான மாரத்​தானில் (42.195 கிலோ மீட்​டர்) இந்​தி​யா​வின் சவான் பர்​வால் பந்தய தூரத்தை 2 மணி நேரம் 11 நிமிடங்​கள் 37 விநாடிகளில் கடந்து 2-வது இடம் பிடித்து வெள்​ளிப் பதக்​கம் வென்​றார். 28 வயதான சவான் பர்​வால் இமாச்​சல் பிரதேசத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஆவார். ஜப்​பானின் இச்​சி​தாகா யமாஷிதா (2:10:49) தங்​கப் பதக்​க​மும், சீனா​வின் பெய்யூ ஃபெங் (2:12:13) வெண்​கலப் பதக்​க​மும் வென்​றனர். ஆசிய விளை​யாட்டு மாரத்​தானில் இந்​தியா வெள்​ளிப் பதக்​கம் வெல்​வது வரலாற்​றில் இதுவே முதன்​முறை.

இதற்கு முன்​னர் கடைசி​யாக 44 வருடங்​களுக்கு முன்​னர் 1982-ம் ஆண்டு டெல்​லி​யில் நடை​பெற்ற ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் இந்​தி​யா​வின் ஒசூர் குக்​கப்பா சீத்​தா​ராம் வெண்​கலப் பதக்​கம் வென்​றிருந்​தார். ஆசிய விளை​யாட்டு மாரத்​தானில் பதக்​கம் வென்ற 4-வது இந்​திய வீரர் என்ற பெரு​மை​யை​யும் சவான் பர்​வால் பெற்​றுள்​ளார்.

டெல்​லி​யில் கடந்த 1951-ம் ஆண்டு நடை​பெற்ற தொடக்க ஆசிய விளை​யாட்​டுப் போட்​டி​யில் இந்​திய வீரர்​களான சோட்டா சிங் மற்​றும் சூரத் சிங் மாத்​தூர் முறையே தங்​க​மும் வெண்​கல​மும்​ வென்​றிருந்​தனர்​.

400 மீட்டர் ஓட்டத்தில் பிராச்சிக்கு வெண்கலம்

ஆசிய விளை​யாட்​டில் மகளிருக்​கான 400 மீட்​டர் ஓட்​டத்​தில் இந்​தி​யா​வின் பிராச்சி சவுத்ரி பந்தய தூரத்தை 53.21 விநாடிகளில் கடந்து 3-வது இடம் பிடித்து வெண்​கலப் பதக்​கம் வென்​றார்.

பக்​ரைனின் சல்வா நாசர், இலக்கை 49.20 விநாடிகளில் எட்டி முதலிடம் பிடித்து தங்​கப் பதக்​க​மும், ஈரானின் ஜஹ்ரா ஜரேய் மனோஜன் (52.38) வெள்ளிப் பதக்​க​மும் வென்​றனர்​.

துப்பாக்கி சுடுதலில் இந்திய அணிக்கு வெள்ளி

ஆசிய விளை​யாட்டு துப்​பாக்கி சுடு​தலில் மகளிருக்​கான 50 மீட்​டர் ரைபிள் 3 பொஷிசனில் திலோத்​தமா சென், விதர்சா வினோத், ’ ஆஷி சவுக்ஸி ஆகியோரை உள்​ளடக்​கிய இந்​திய அணி இறு​திப் போட்​டி​யில் 1,763 புள்​ளி​களை குவித்து 2-வது இடம் பிடித்து வெள்​ளிப் பதக்​கம் வென்​றது.

சீனா 1,773 புள்​ளி​களு​டன் முதலிடம் பிடித்து தங்​கப் பதக்​க​மும், கஜகஸ்​தான் 1,754 புள்​ளி​களு​டன் 3-வது இடம் பிடித்து வெண்​கலப் பதக்​க​மும் பெற்​றன. 50 மீட்​டர் ரைபிள் 3 பொஷிசனில் தனி​நபர் பிரி​வில் இந்​தி​யா​வின் திலோத்​தமா சென் 337.3 புள்​ளி​களு​டன் 4-வது இடம் பிடித்து ஏமாற்​றம் அளித்​தார். விதர்சா வினோத் 327.4 புள்​ளி​களு​டன் 5-வது இடம் பிடித்​தார்.

சீனா​வின் ஜியாயு ஹான் 359 புள்​ளி​கள் குவித்து என்ற ஆசிய விளை​யாட்டு சாதனை​யுடன் முதலிடம் பிடித்து தங்​கப் பதக்​கம் வென்​றார். சீனாவைச் சேர்ந்த லியு​வான் ஜாங் (358.8) வெள்​ளிப் பதக்​க​மும், தென் கொரி​யா​வின் ஜியூன் கிம் (348.4) வெண்​கலப் பதக்​கத்​தை​யும்​ கைப்​பற்​றினர்​.

ஆசிய விளையாட்டு போட்டி: கபடியில் இந்தியாவுக்கு இரட்டை தங்கம்
ஸ்ரீவில்லி. மேகமலை புலிகள் காப்பகம் பெருமாள் மொட்டை பகுதியில் காட்டுத்தீ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in