கலப்பு ரிலேவில் வெண்கலம் முதல் ‘பதக்க பட்டியல்’ வரை | ஆசிய விளையாட்டு போட்டி ஹைலைட்ஸ்

கலப்பு ரிலேவில் வெண்கலம் முதல் ‘பதக்க பட்டியல்’ வரை | ஆசிய விளையாட்டு போட்டி ஹைலைட்ஸ்
Updated on: 
2 min read

4x100 மீட்டர் கலப்பு ரிலேவில் இந்திய அணிக்கு வெண்கலம்

ஆசிய விளையாட்டு போட்டியில் 4x100 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் குரிந்தர்வீர் சிங், அனிமேஷ் குஜூர், சினேகா சத்யநாராயணன், ஹரிதா பத்ரா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி பந்தய தூரத்தை 41.06 விநாடிகளில் கடந்து 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றது. சீனா (40.78 விநாடிகள்) தங்கப் பதக்கமும், தாய்லாந்து (40.87) வெள்ளிப் பதக்கமும் வென்றன.

ஆடவருக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணிக்கு வெண்கலம்

ஆடவருக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தரம்வீர் சவுத்ரி, மானு தெக்கினாலில், ஜெய் குமார், விஷால் தென்னரசு ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி பந்தய தூரத்தை 3:01.61 விநாடிகளில் கடந்து 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றது. ஜப்பான் (3:00.75) தங்கப் பதக்கமும், கத்தார் (3:00.93) வெள்ளிப் பதக்கமும் வென்றன.

வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றுள்ள விஷால் தென்னரசு தமிழகத்தின் ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் ஆவார். நடப்பு ஆசிய விளையாட்டில் விஷால் தென்னரசுக்கு இது 2-வது பதக்கமாக அமைந்தது. அவர், கலப்பு 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணியிலும் இடம் பெற்றிருந்தார்.

கிரிக்கெட் அரை இறுதியில் இந்தியா - இலங்கை மோதல்

ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் ஆடவருக்​கான கிரிக்​கெட் கால் இறுதி சுற்​றில் நேற்று இலங்கை - நேபாளம் அணி​கள் நகோயா நகரில் மோத இருந்​தன. ஆனால் இந்த ஆட்​டம் மழை மற்​றும் ஈரப்​ப​தம் காரண​மாக கைவிடப்​பட்​டது. இதையடுத்து ஐசிசி தரவரிசை​யில் 9-வது இடத்​தில் உள்ள இலங்கை அணி அரை இறு​திக்கு முன்​னேறியது. 14-வது இடத்​தில் இருந்த நேபாளம் அணி வெளி​யேறியது.

மோச​மான வானிலை காரண​மாக கிரிக்​கெட் போட்​டி​யில் 4 கால் இறுதி ஆட்​டங்​களும் ரத்​தாகி உள்​ளன. நாளை நடை​பெறும் அரை இறுதி ஆட்​டத்​தில் இந்​தியா - இலங்கைஅணி​கள் மோதுகின் றன. மற்​றொரு அரை இறு​தி​யில் பாகிஸ்​தான் - வங்​கதேசம் அணி​கள் பலப்​பரீட்சை நடத்​துகின்​றன.

பொம்மதேவரா, நீரஜ் சவுகான் வெற்றி

ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் ஆடவருக்​கான வில்வித்தை தனி​நபர் ரீகர்வ் பிரி​வில் இந்​தி​யா​வின் தீரஜ் பொம்​மதேவ​ரா, நீரஜ் சவு​கான் ஆகியோர் கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறினர். நீரஜ் சவுகான் 6-4 என்ற கணக்​கில் தென் கொரி​யா​வின் கிம் ஜி டியோக்​கை​யும், தீரஜ் பொம்​மதேவரா 6-2 என்ற கணக்​கில் சீன தைபே​வின் செங் சியாங்​-ஹுய்​-யை​யும் தோற்​கடித்​தனர்.

கால் இறுதி சுற்​றில் தீரஜ் பொம்​மதேவ​ரா, உஸ்​பெகிஸ்​தானின் அமிர்​கோன் சாடிகோவுட​னும் நீரஜ் சவுகான், பூடானின் லாம் டோர்​ஜி​யுட​னும் மோதுகின்​றனர். மகளிருக்​கான ரீகர்வ் தனி​நபர் பிரி​வில் இந்​தி​யா​வின் குங்​கும் முகத் அனில் 6-0 என்ற கணக்​கில் வங்​கதேசத்​தின் சைமா சலா​வு​தினை வீழ்த்தி கால் இறுதி சுற்​றில் கால்​ப​தித்​தார்​.

சுமித் நாகல், தட்சிணேஸ்வர் முன்னேற்றம்

ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் ஆடவருக்​கான டென்​னிஸ் போட்​டி​யில் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் இந்​தி​யா​வின் தட்​சிணேஸ்​வர் சுரேஷ் 7-5 7-6(2) என்ற செட் கணக்​கில் இந்​தோ​னேஷி​யா​வின் குன​வான் ட்ரிஸ்​மு​வாந்​த​ராவை வீழ்த்தி கால் இறு​திக்கு முந்​தைய சுற்​றுக்கு முன்​னேறி​னார். மற்​றொரு இந்​திய வீர​ரான சுமித் நாகல் 6-4 6-0 என்ற செட் கணக்​கில் தென் கொரி​யா​வின் சியோங்​சான் ஹாங்கை தோற்​கடித்​தார்​.

வாலிபால் கால் இறுதியில் இந்திய அணி

ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் ஆடவருக்​கான வாலி​பால் போட்​டி​யில் ‘சி’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள இந்​திய அணி தனது கடைசி லீக் ஆட்​டத்​தில் நேற்று கத்​தா​ருடன் மோதி​யது. இதில் முதல் இரு செட்​களை​யும் இந்​திய அணி 26-28, 25-27 என நெருக்​க​மாக வந்து இழந்​தது. எனினும் அடுத்த 3 செட்​களை​யும் கடுமை​யாக போராடி 25-23, 25-20, 24-22 என கைப்​பற்​றியது.

2 மணி நேரம் 47 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் இந்​திய அணி 26-28, 25-27, 25-23, 25-20, 24-22 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று தனது பிரி​வில் முதலிடம் பிடித்து கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறியது. இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் வியட் நாமை​யும், 2-வது ஆட்​டத்​தில் ஹாங் காங்​கை​யும் வீழ்த்தியிருந்​தது.

கத்​தார் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் இந்​திய அணி​யில் ஜெரோம் வினித் 27 புள்​ளி​களை​யும், அமித் சிங் பல்​வான் 24 புள்​ளி​களை​யும், ஜோயல் பெஞ்​சமின் ஜெப​ராஜ் 17 புள்​ளி​களை​யும் குவித்​தனர். இதில் ஜெரோம் வினித், ஜோயல் பெஞ்​சமின் ஜெப​ராஜ் ஆகியோர்​ தமிழகத்​தை சேர்​ந்​தவர்​கள்​ ஆ​வார்​.

படகோட்​டு​தலில் முன்​னேற்​றம்

ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் படகோட்​டு​தலில் ஆடவருக்​கான கயாக் தனி​நபர் பிரி​வில் இந்​தி​யா​வின் ஹிதேஷ் கேவாத் பந்தய தூரத்தை 118.22 விநாடிகளில் எட்டி 8-வது இடமும், பிரத்​யும்னா சிங் ரத்​தோர் 127.70 விநாடிகளில் எட்டி 10-வது இடமும் பிடித்து அரை இறு​திக்கு முன்​னேறினர். மகளிர் பிரி​வில் பல்​லவி ஜெகதாப், ரினா சென் ஆகியோ​ரும் அரை இறு​திக்​குள் நுழைந்தனர்​.

கலப்பு ரிலேவில் வெண்கலம் முதல் ‘பதக்க பட்டியல்’ வரை | ஆசிய விளையாட்டு போட்டி ஹைலைட்ஸ்
குத்துச்சண்டை இறுதிப் போட்டியில் அங்குஷ் பங்ஹால், பர்வீன் ஹூடா

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in