ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: இந்தியா அபார வெற்றி

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: இந்தியா அபார வெற்றி
Updated on: 
1 min read

ஜலந்​தர்: ஆட​வர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்​கிப் போட்டியில் இந்திய அணி, வங்​கதேசத்தை வீழ்த்​தி​யது. பஞ்​சாப் மாநிலம் ஜலந்​தரில் உள்ள சுர்​ஜித் சிங் ஹாக்கி மைதானத்​தில் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்​டிகள் நேற்று கோலாகல மாகத் தொடங்​கின. இந்​தியா, மலேசியா, சீனா, ஜப்​பான், தென் கொரியா, வங்​கதேசம் ஆகிய 6 நாடுகள் இப்​போட்​டி​யில் பங்​கேற்​கின்​றன.

நேற்று இரவு 7 மணிக்கு நடை​பெற்ற ஆட்​டத்​தில் இந்​திய அணி 13-0 என்ற கோல்​கள் கணக்​கில் வங்​கதேசத்தை வீழ்த்​தி​யது. இந்​திய அணி தரப்​பில் மன்​தீப் சிங், தில்​பிரீத் சிங், கேப்​டன் ஹர்​மன்​பிரீத் சிங் ஆகியோர் தலா 3, ஷைலானந்த் லக்ரா, அபிஷேக் நைன், நீல​கண்ட சர்மா, ஜுக்ராஜ் ஆகியோர் தலா ஒரு கோலடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்​தனர்.

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: இந்தியா அபார வெற்றி
அபிஷேக் சர்மா 38 பந்தில் 133 ரன் விளாசல்: டி20 தொடரை வென்றது இந்திய அணி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in