ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் இன்று தொடக்கம்!

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் இன்று தொடக்கம்!
Updated on
2 min read

பெர்த்: ஆஸ்​திரேலியா - இங்​கிலாந்து அணி​கள் இடையி​லான பாரம்​பரியமிக்க 5 போட்​டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்​கெட் தொடரின் முதல் போட்டி பெர்த்​தில் இன்று காலை 7.50 மணிக்கு தொடங்​கு​கிறது.

பென் ஸ்டோக்ஸ் தலை​மையி​லான இங்​கிலாந்து கிரிக்​கெட் அணி 5 போட்​டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளை​யாடு​வதற்​காக ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இரு அணி​கள் இடையி​லான பாரம்​பரியமிக்க இந்த ஆஷஸ் தொடர் 74-வது முறை​யாக நடை​பெறுகிறது. கடைசி​யாக ஆஸ்​திரேலிய மண்​ணில் இங்​கிலாந்து அணி கடந்த 2010-2011-ம் ஆண்டு நடை​பெற்ற ஆஷஸ் தொடரை 3-1 என வென்​றது.

அதன் பின்​னர் ஆஸ்​திரேலிய மண்​ணில் நடை​பெற்ற 3 தொடர்​களை​யும் இங்​கிலாந்து அணி இழந்​தது. இதில் 13 போட்​டிகளில் தோல்​வியை​யும், 2 ஆட்​டத்தை டிரா​வும் செய்​திருந்​தது இங்​கிலாந்து அணி. எனினும் இம்​முறை வயதான வீரர்​கள், பலவீன​மான பந்து வீச்​சுடன் காணப்​படும் ஆஸ்​திரேலிய அணிக்கு எதி​ராக இங்​கிலாந்து வீரர்​கள் ஆதிக்​கம் செலுத்த முயற்​சிக்​கக்​கூடும்.

பந்து வீச்சை பொறுத்​தவரை​யில் ஜோப்ரா ஆர்ச்​சர், மார்க் அவுட், கஸ் அட்​கின்​சன், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் ஆஸ்​திரேலிய அணி​யின் பேட்​டிங் வரிசைக்கு அழுத்​தம் கொடுக்க முயற்​சிக்​கக்​கூடும். பேட்​டிங்​கில் ஜாக் கிராலி, பென் டக்​கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்​ஸ், ஜேமி ஸ்மித் ஆகியோர் நம்​பிக்கை அளிக்​கக்​கூடிய​வர்​களாக திகழ்​கின்​றனர்.

ஆஸ்​திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித் தலை​மை​யில் களமிறங்​கு​கிறது. அந்த அணி​யில் பிர​தான வேகப்​பந்து வீச்​சாளர்​களான கேப்​டன் பாட் கம்​மின்​ஸ், ஜோஷ் ஹேசில்​வுட் ஆகியோர் காயம் காரண​மாக விளை​யாட​வில்​லை. இதனால் மிட்​செல் ஸ்டார்க், நேதன் லயன் ஆகியோரை நம்​பியே பந்​து​வீச்சு திட்​டங்​கள் அமையக்​கூடும். முதல் டெஸ்ட் போட்​டிக்​கான விளை​யாடும் லெவனை ஆஸ்​திரேலிய கிரிக்​கெட் வாரி​யம் நேற்று அறி​வித்​தது.

இதில் தொடக்க பேட்​ஸ்​மேன் ஜாக் வெத​ரால்ட், வேகப்​பந்து வீச்​சாளர் பிரெண்​டன் டாகெட் ஆகியோர் அறி​முக வீரர்​களாக இடம் பெற்​றுள்​ளனர். ஆல்​ர​வுண்​டராக கேமரூன் கிரீன் சேர்க்​கப்​பட்​டுள்​ளார்.

பேட்​டிங்​கில் கேப்​டன் ஸ்டீவ் ஸ்மித், உஸ்​மான் கவாஜா, மார்​னஸ் லபுஷேன் ஆகியோர் தங்​களது அனுபவத்​தால் பலம் சேர்க்​கக்​கூடும். டிரா​விஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன் ஆகியோ​ரும் கைகொடுக்​கும் பட்​சத்​தில் அணி கூடு​தல் பலம் பெறும்.

அணி​கள் விவரம் - ஆஸ்​திரேலி​யா: ஸ்டீவ் ஸ்மித் (கேப்​டன்), ஜாக் வெத​ரால்ட், உஸ்​மான் கவாஜா, மார்​னஸ் லபுஷேன், டிரா​விஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, மிட்​செல் ஸ்டார்க், நேதன் லயன், பிரெண்​டன் டாகெட், ஸ்காட் போலண்ட்.

இங்​கிலாந்​து: பென் ஸ்டோக்ஸ் (கேப்​டன்), ஜாக் கிராலி, பென் டக்​கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித், ஷோயப் பஷீர், பிரைடன் கார்​ஸ், கஸ் அட்​கின்​சன், ஜோஃப்ரா ஆர்ச்​சர், மார்க் வுட்.

2 பூர்​வக்குடி வீரர்​கள்: பெர்த்​தில் இன்று தொடங்க உள்ள ஆஷஸ் டெஸ்ட் கிரிக்​கெட் தொடரின் முதல் போட்​டிக்​கான ஆஸ்​திரேலிய அணி​யில் அந்​நாட்​டின் பூர்​வக்​குடியை சேர்ந்த ஸ்காட் போலண்ட், பிரெண்​டன் டாகெட் ஆகிய 2 வீரர்​கள் இடம் பெற்​றுள்​ளனர். ஆஸ்​திரேலிய டெஸ்ட் கிரிக்​கெட் வரலாற்​றில் ஒரே போட்​டி​யில்​ பூர்​வகுடியை சேர்ந்​த இரு​வர்​ விளை​யாடு​வது இது​வே முதன்​முறை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in